என் கணவர் ஆபாச பட மன்னனா? பணத்திற்காக திருமணம் செய்யவில்லை.. கடுப்பான ஷில்பா ஷெட்டி!

மும்பை: பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை பணத்துக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், அவரை விட பணக்காரர்கள் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி1993ம் ஆண்டு வெளியான பாஸிகர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து,1996ம் ஆண்டு தமிழில் பிரபுதேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியோ படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். பின்னர், எஸ்.ஜே., சூர்யா இயக்கத்தில், விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியாகி குஷி படத்தில் மேக்கரினா மேக்கரினா பாடலுக்கு நடனமாடி தமிழ் ஆடியன்சுக்கு தெரிந்த முகம் ஆனார்.

Actress Shilpa Shetty opened up about her husband Raj kundra

படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த ஷில்பா, ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் இணை உரிமையாளராக இருந்த ராஜ் குந்த்ராவை 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2020ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

நடிகை ஷில்பா ஷெட்டி: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது 2021-ம் ஆண்டு, ஆபாச வீடியோ தயாரித்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கொரோனா காலத்தில் கஷ்டப்பட்ட நடிகைகளிடம் பண ஆசைக் காட்டி, வீடியோவில் நடிக்க வைத்து வெளிநாட்டு மொபைல் ஆப்களில் அவர் வெளியிட்டதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், 2 மாதம் கழித்து ஜாமீனில் வெளியே வந்தார். மேலும், ராஜ் குந்த்ரா தனது சிறை வாழ்க்கையை 'யுடி69' என்ற பெயரில் திரைப்படமாக வெளியிட்டார்.

கணவர் ஆபாச பட மன்னன்: இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷில்பா ஷெட்டி, என் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச பட மன்னன் என்றும், நான் பணத்திற்காக அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் பலர் விமர்சிக்கின்றனர். நான் அவரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பணக்காரியாகத்தான் இருந்தேன், இப்போதும் பணக்காரியாகத்தான் இருக்கிறேன். ஒரு வெற்றிகரமான பெண்ணாக இருக்கும்போது, என்னை பாதுகாக்க ஒரு ஆண் இருக்க வேண்டும் என்பதால் அவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் நல்ல மனிதராக இல்லாவிட்டால் நான் அவரை திருமணம் செய்து இருக்கமாட்டேன். மேலும் ராஜ் குந்தராவை விட வசதி படைத்தவர்கள் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைபட்டார்கள்.

நான் பணக்காரிதான்: அதே போல பலர் என்னுடைய நிதி நிலைமை குறித்து தவறாக பேசி வருகிறார்கள். அவர்களின் எண்ணம் முற்றிலும் தவறானது. கடந்த முறை எங்களுடைய ஹோட்டலுக்காக அதிகபட்ச ஜிஎஸ்டி பணத்தை நாங்கள் செலுத்தி இருக்கிறோம். என்னுடைய மேலாளர்கள் எனக்கு சினிமாவில் வரும் வாய்ப்புகளை விட, ஹோட்டலில் அதிக சீட்கள் புக் ஆவதாக கூறுகிறார்கள் என்று நடிகை ஷில்பா ஷெட்டி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X