சச்சின் என்னை காதலித்தாரா?.. உண்மையில் என்ன நடந்தது?.. பல வருடங்கள் பிறகு நடிகை கொடுத்த விளக்கம்
சென்னை: உலக கிரிக்கெட்டில் ஜாம்பவனாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மெட்டுகளிலும் கலக்கிய அவர்; கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இன்றளவும் அவர் பல ரசிகர்களுக்கு கிரிக்கெட்டிலும், ரியல் லைஃபிலும் ரோல் மாடலாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை ஷில்பா ஷிரோத்கர் அவர் குறித்து பேசிய வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டை சர்வதேச அரங்கில் தலை நிமிர வைத்தவர் சச்சின் டெண்டுல்கர். லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என பல பட்ட பெயர்கள் கொண்டு அவரை ரசிகர்கள் அழைத்தார்கள். சர்வதேச அளவில் மிகப்பெரிய ஜாம்பவனாக வலம் வந்த அவர்; சதங்களில் சதம் கண்டவர். அந்த சாதனையை இன்றளவும் யாராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக ரன்கள்: ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். அவரது இந்த சாதனையை இன்றளவும் யாராலும் முறிடியக்க முடியவில்லை. மேலும் எப்போதுமே எந்த கிரிக்கெட் வீரராலும் அவரது ரெக்கார்டுக்கு அருகேகூட வர முடியாது என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

ஓய்வு பெற்ற சச்சின்: கிரிக்கெட்டை எப்படி நேர்மையாகவும் , ஒழுங்குடனும் அணுகி விளையாடினாரோ அதேபோல் ரியல் வாழ்க்கையிலும் திகழ்ந்தவர் சச்சின். அவரது பேட்டிங்கிற்காக மட்டுமின்றி அவரின் தனிப்பட்ட குணநலன்களுக்காகவும் அனைவராலும் மதிக்கப்பட்ட அவர்; கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் அவர் குறித்து நடிகை ஷில்பா ஷிரோத்கர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஷில்பாவின் பேட்டி: அவர் சமீபத்தில் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "1991ஆம் ஆண்டு ஹம் என்ற படத்தின் ஷூட்டிங்கில்தான் சச்சினை முதன்முறையாக பார்த்தேன். அவர் எனது உறவினர் வசிக்கும் அதே பகுதியில்தான் வசித்துவந்தார். எனது உறவுக்கார பையன் ஒருவருடன் அவர் ஒன்றாக கிரிக்கெட் விளையாடும்போது சச்சினை பார்த்திருக்கிறேன். அப்போதே அவர் அஞ்சலியைத்தான் காதலித்தார்.
என்னை காதலிக்கவில்லை: அதேசமயம் அவர் அஞ்சலியை காதலித்த தகவல் அப்போதைக்கு யாருக்கும் தெரியாது. நான் ஒரு நடிகை, சச்சின் ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருந்தார். எனவே நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக சந்தித்தபோது நாங்கள் காதலிகிறோம் என்று ஊடகங்கள் சொல்ல தொடங்கின. ஆனால் அப்படி எதுவும் இல்லை. சச்சின் அப்போதே அஞ்சலியைத்தான் காதலித்துக்கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை" என்றார்.


Click it and Unblock the Notifications











