»   »  நெடுஞ்சாலை ஷிவதா நாயருக்கு நாளை டும் டும் டும்

நெடுஞ்சாலை ஷிவதா நாயருக்கு நாளை டும் டும் டும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நெடுஞ்சாலை படத்தில் நாயகியாக நடித்த ஷிவதா நாயர் மலையாள இளம் நடிகர் முரளி கிருஷ்ணன் இருவருக்கும் நாளை கேரளாவில் திருமணம் நடைபெறவிருக்கிறது.

பிரபல இயக்குநர் பாசில் இயக்கிய லிவிங் டு கெதர் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷிவதா நாயர். தமிழில் ஆரியுடன் இணைந்து நடித்த நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் தமிழிலும் ஷிவதா பிரபலமானார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் நண்பரும் நடிகருமான முரளி கிருஷ்ணனை நாளை மணந்து திருமதி முரளி கிருஷ்ணனாக மாறவிருக்கிறார் ஷிவதா நாயர்.

ஷிவதா நாயர்

ஷிவதா நாயர்

தமிழில் நெடுஞ்சாலை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஷிவதா நாயர் தற்போது பாபி சிம்ஹாவின் வல்லவனுக்கு வல்லவன், அசோக் செல்வனின் ஜீரோ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

ஷிவதா நாயர் - முரளி கிருஷ்ணன்

ஷிவதா நாயர் - முரளி கிருஷ்ணன்

நடிகை ஷிவதா நாயருக்கும் மலையாள இளம் நடிகர்களில் ஒருவரான முரளி கிருஷ்ணனுக்கும் நாளை கேரள மாநிலத்தில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது. ரகுவிண்டே ஸ்வந்தம் ரசியா என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் முரளி கிருஷ்ணன். இவர் அடுத்ததாக ஜக்கரியா போத்தன் ஜீவிச்சிருப்புண்டு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

காதல்

காதல்

முரளி கிருஷ்ணன் - ஷிவதா நாயர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.முரளி கிருஷ்ணன் ஒரு பக்கம் நடிப்பு மற்றொரு புறம் தொழில் என்று இரண்டையும் ஒருசேரக் கவனித்து வருகிறார். தற்போது இருவரின் பெற்றோரும் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டி விட்டனர்.

திருமணதிற்குப் பின்

திருமணதிற்குப் பின்

திருமணத்திற்குப் பின்னர் நல்ல வேடங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன். ஆனால் முன்னுரிமை எனது குடும்பத்திற்குத் தான் என்று நடிகை ஷிவதா தெரிவித்து இருக்கிறார். திருமணம் முடிந்த 2 நாட்களில் பாபி சிம்ஹாவுடன் வல்லவனுக்கு வல்லவன் படப்பிடிப்பில் ஷிவதா நாயர் இணைந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nedunchalai Fame Actress Shivada Nair will marry Malayalam actor Muralikrishnan on December 14.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil