விரைவில் வருவேன்.. பரதநாட்டியம் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த ஷிவாங்கி!
சென்னை : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் ஷிவாங்கி.
இந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான படவாய்ப்புகளையும் பெற்றுள்ளார்.
ஷிவாங்கி நடிப்பில் டான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

நடிகை ஷிவாங்கி
விஜய் டிவியின் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் ஷிவாங்கி. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்று தன்னுடைய அடுத்தடுத்த கெட்டப்புகள் மற்றும் க்யூட் பர்பார்மென்ஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பாடகி + நடிகை
இந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான படங்களில் பாடும் வாய்ப்பு மற்றும் நடிக்கும் வாய்ப்பையும் ஷிவாங்கி பெற்றுள்ளார். தனிப்பட்ட முறையில் ஆல்பங்களிலும் பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து வருகிறது. மேலும் கச்சேரிகளில் பாடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்து வருகிறது. இவரது நடிப்பில் டான் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படங்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்த படங்களில் கமிட்டான ஷிவாங்கி
தொடர்ந்து காசே தான் கடவுளடா உள்ளிட்ட படங்களிலும் ஷிவாங்கி கமிட்டாகி நடித்து வருகிறார். டிவி நிகழ்ச்சி, பாடகி, நடிகை என தன்னுடைய பன்முக திறமையால் தொடர்ந்து பிசியாக காணப்படுகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தனது அடுத்தடுத்த பதிவுகளால் இன்ஸ்டாகிராமில் 5 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை பெற்றுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
இவரது அடுத்தடுத்த பதிவுகள் ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று வருகின்றன. அடுத்தடுத்த போட்டோஷுட்கள், தன்னுடைய வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்டவற்றின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ட்விட்டரிலும் ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி தற்போது தான் பரதநாட்டியம் ஆடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் விரைவில் வருவதாகவும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

பரதநாட்டிய போஸ்
பாரம்பரிய முறையிலான பின்புலத்தில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மிகவும் அழகாக அழகான போஸுடன் இந்தப் படங்களில் ஷிவாங்கி காணப்படும் நிலையில், ஏராளமான லைக்ஸ்களும் இந்தப் புகைப்படங்களுக்கு கிடைத்துள்ளன. மேலும் ஏராளமான ரசிகர்களும் இந்தப் புகைப்படங்களை பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











