அரபிக் இசைக்கு சூப்பர் குத்தாட்டம்... அள்ளும் அழகு... குஷியான ரசிகர்கள்!

சென்னை : நடிகை ஷிவானி நாராயணன் சீரியல்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

Recommended Video

அரபிக் இசைக்கு சூப்பர் குத்தாட்டம்... அள்ளும் அழகு... குஷியான ரசிகர்கள்!

தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டையை கிளப்பினார்.

இதன்மூலம் கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடிக்க இவருக்கு சான்ஸ் கிடைத்துள்ளது.

நடிகை ஷிவானி நாராயணன்

நடிகை ஷிவானி நாராயணன்

நடிகை ஷிவானி நாராயணன் ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர். தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பான கவனத்தை பெற்றார். நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

விக்ரம் பட வாய்ப்பு

விக்ரம் பட வாய்ப்பு

இதையடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகளும் தொடர்ந்து கிடைத்து வருகிறது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்திலும் முக்கியமான கேரக்டரில் ஷிவானி இணைந்துள்ளார். இதுகுறித்து முன்னதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்த ஷிவானி, கனவு நனவாகியுள்ளதாகவும் கூறியிருந்தார்.

பெரிய திரையில் ஷிவானி

பெரிய திரையில் ஷிவானி

இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஏப்ரலில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களில் ஷிவானியை பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது அவரை பெரிய திரையிலும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களிலும் ஷிவானி மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறார். தினந்தோறும் புதிய புதிய பதிவுகளை அவர் வெளியிட்டு வருகிறார். ஒரு புகைப்படத்தையாவது அவர் பதிவிட்டு விடுவது வழக்கம். போட்டோ ஷுட்களையும் மேற்கொண்டு அதன் புகைப்படங்களையும் பதிவிடுகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

அரபிக் இசைக்கு நடனம்

அரபிக் இசைக்கு நடனம்

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரபிக் இசைக்கு அவர் சேலையில் ஆடியுள்ள டான்ஸ் ரசிகர்களை மிகவும் கவரும்வகையில் அமைந்துள்ளது. அரபிக் மியூசிக்கில் தென்னிந்திய நடனத்தை புகுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிம்பிளான பச்சை நிற சேலையில் அவரின் இந்த நடனம் வழக்கம் போலவே சிறப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X