டூ…டூ…டூ…னு பாத்ரூமில் ஆட்டம் போட்ட ஷிவானி… வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள் !
சென்னை : பட வாய்ப்பு வருதோ இல்லையோ... தினம் தினம் ஒரு போட்டோஷூட் எடுத்தா போதும் என்று முடிவுக்கு வந்துவிட்டார் ஷிவானி.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின், லாஸ்லியா, தர்ஷன் போன்றோர் வெள்ளித்திரையில் மின்னத் தொடங்கிவிட்டனர். ஷிவானிக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளன.
கொஞ்ச நாட்களாக இன்ஸ்டாகிராமில் நடன வீடியோக்களை பதிவிடாமல் இருந்த ஷிவானி மீண்டும் சூப்பரான ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஷிவானி நாராயணன்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும் கார்த்திக் சாயிஷா நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்தியின் முறைபெண்ணாக நடித்திருந்தார்.

பிக்பாஸ்
இன்ஸ்டாகிராமில் பிரபலமான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். ஆரம்பத்தில் அந்த வீட்டில் தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருந்த ஷிவானி, பாலாஜி முருகதாசுடன் நெருக்கமாக பழகி சர்ச்சையில் சிக்கினார். ஷிவானி அம்மா வந்து ரெய்டு விட்ட பிறகே வேகமாக பரவிய கிசு கிசு குறைந்தது.
Recommended Video

இணையத்தில் ஆக்டிவ்
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஷிவானி இன்ஸ்டாகிராமில் இருந்த கவர்ச்சி புகைப்படங்களை படபடனு டெலிட் செய்தார். என்னடா அம்மணிக்கு திடீரென்னு ஞானோதயம் என்று ரசிகர்கள் யோசித்தனர். இனிமே கவர்ச்சியா போட்டோவை அப்லோடு செய்யமாட்டாரோ என்று யோசித்த போது... வந்துட்டேனு சொல்லு திரும்பி வந்துட்டேனு சொல்லு என்பது போல மீண்டும் அதிரிபதிரி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

டூ..டூ..டூ பாட்டுக்கு செம ஆட்டம்
தற்போது, இவர், காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் வந்த டூ..டூ..டூ என்ற பாடலுக்கு சும்மா இறங்கி குத்தி உள்ளார். ஷிவானி தன்னுடைய பழைய பாணியில் கவர்ச்சியான நடன அசைவுடன் இந்த பாட்டுக்கு ஆடி உள்ளார். மேலும், இதற்கு கேப்ஷனாக Move your legs for the fun filled Two Two from Kaathuvaakula Rendu Kaadhal என அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ அதிக லைக்குகளை குவித்து வருகிறது. வீடியோ வெளியான ஒரே நாளில் 2 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











