Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அய்யய்யோ.. அந்தரத்தில் வவ்வால் போல் தொங்கும் ஷிவானி நாராயணன்.. பதற வைக்கும் போட்டோஸ்!
சென்னை: நடிகை ஷிவானி நாராயணன் அந்தரத்தில் தொங்கும் போட்டோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆசிம்மை காதலித்தார்.
ஆனால் ஆசிம் ஷிவானியின் காதலை ஏற்க மறுத்ததால் அந்த சீரியலில் இருந்து விலகினார். தொடர்ந்து மாடலிங் என பிஸியாக இருந்து வரும் ஷிவானி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
தாவணியில் இடுப்பை குலுக்கி குலுக்கி ஆட்டம் போட்ட ஷிவானி… வைரலாகும் வீடியோ !
கிளாமர் போட்டோக்கள்
இன்ஸ்டாகிராமில் மட்டும் 29 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி, நாள்தோறும் தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பாலாஜிக்கு மசாஜ்
இதில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக பழகினார். பாலாஜிக்கு மாசாஜ் செய்வது, ஊட்டி விடுவது, காலையில் அவரை எழுப்பி விடுவது என இருந்து வந்தார். இதனால் இருவருக்கும் காதல் என கூறப்பட்டது.
பாலாஜியுடன் பழக்கம்
பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா, பாலாஜிக்கு ஆயா வேலை செய்ய வந்தீயா என கேட்டு விளாசி விட்டார். இருப்பினும் பாலாஜியுடன் பழகி வந்தார் ஷிவானி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் ஷிவானி பாலாஜியுடன் பழகி வருகிறார்.
சோம் சேகருக்கு ஜோடி
ஷிவானி வீட்டு விசேஷத்தில் பாலாஜி பங்கேற்ற போட்டோக்கள் வெளியாகி வைரலானது. தற்போது ஷிவானி நாராயணன் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சோம் சேகருக்கு ஜோடியாக ஆடி வருகிறார்.
வவ்வால் போல் தொங்கி
இந்நிலையில் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள சில போட்டோக்கள் ரசிகர்களின் விழிகளை விரிய செய்துள்ளது. அதாவது ஷிவானி நாராயணன் வவ்வால் போல் அந்தரத்தில் தொங்குகிறார்.
Recommended Video
தலைக்கீழாக தொங்குகிறார்
இதேபோல் உடம்பை வில்லாக வளைத்தும், சப்பளம் போட்டு அமர்ந்திருப்பது போன்றும் தலைக்கீழாக தொங்குகிறார் ஷிவானி. ஷிவானியின் இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.