பொங்கல் அதுவுமா எதுக்கு இப்படி.. ஷிவானி நாராயணனின் போஸ்டால் சோகத்தில் ரசிகர்கள்!
சென்னை: நடிகை ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பொங்கல் அதுவுமா எதுக்கு இப்படி ஒரு போஸ்ட் என்று ஷிவானியிடம் செல்ல சண்டை போட்டு வருகின்றனர். விஜய் டிவி பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமான ஷிவானிக்கு இளசுகள் மட்டுமில்லாமல் இல்லத்தரசிகளும் ரசிகர்களாக மாறினார்கள்.
அந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷிவானி, விஜய் தொலைக்காட்சியில் வரவேற்பை பெற்ற சரணவன் மீனாட்சி 3, ராஜா ராணி சீசன் 1, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்தார். அதன் பிறகு கார்த்திக் நடித்த கடைகுட்டி சிங்கம் படத்தில், கார்த்தியின் முறை பெண்ணாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகை என்ற பெயர் ஷிவானிக்கு கிடைத்தது.

இந்த படவாய்ப்பு பத்தாது மேலும், பிரபலமாக வேண்டும் என்று விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், படு கவர்ச்சியான குட்டி டவுசருடன் தொடை அழகை காட்டி ரசிகர்களை வளைத்துப் போட்டார். இதனால், இவர் பிக் பாஸ் வீட்டில் சரியாக விளையாடவில்லை என்றாலும், டீன் ஏஜ் பாய்ஸ் இவருக்கு வாக்களித்து நிகழ்ச்சியில் இறுதி வரை இருக்கவைத்தனர்.
பாலா மாமா: பிக் பாஸ் வீட்டில் பாலா மாமா... பாலா மாமா என பாலாவின் பின்னாடி திரிந்த, ஷிவானி பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அம்மாவிடம் வாங்கி கட்டிக்கொண்டார். இதையடுத்து, பாலாவும் ஷிவானியும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஷிவானி நாராயணன் இன்னமும் தனது பிறந்தநாள் பார்ட்டிக்கு பாலாவுக்கு மட்டும் ஸ்பெஷலாக அழைத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பாலா எனக்கு அண்ணன் மாதிரி என்றும் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

ஓவர் கவர்ச்சி: கவர்ச்சி ஓவர் கவர்ச்சி காட்டினால் தான் படவாய்ப்பு தேடி வரும் என்று தெரிந்து கொண்ட ஷிவானி நாராயணன், முன்னழகு, பின்னழகி, உடல் வளைவு தெரியும் படி ரீல்ஸ் மற்றும் புகைப்படத்தை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருந்தார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரே ஒரு சீன் தான் ஷிவானி வந்தார் என்றாலும், விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்ததால், அந்த படத்தில் நடித்த நடிகை என ஷிவானி நாராயணன் பெயர் எடுத்தார். இதையடுத்து, எட்டு தோட்டாக்கள் படத்தில் ஹீரோவாக நடித்த வெற்றிக்கு ஜோடியாக பம்பர் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

பொங்கல் க்ளிக்ஸ்: அடுத்த பட வாய்ப்பை பிடிக்க இன்ஸ்டாகிராமில் கிழிந்த ஜீன் டவுசருடன் படு கில்மாவான போட்டோக்களை பதிவிட்டு வந்த ஷிவானி, பொங்கல் அதுவுமா பெயருக்கு புடவையை சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக பண்டிகை வந்துவிட்டால், மணப்பெண் போல தன்னை அலங்கரித்துக்கொள்ளும் ஷிவானி நாராயணன், தற்போது டல்லாக இருப்பதைப் பார்த்த பேன்ஸ் சோகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











