Shobana: ரஜினிகாந்தின் தளபதி படத்தில் நடித்த ஷோபனாவை அழவைத்த மணிரத்னம்.. என்னதான் நடந்தது?
சென்னை: நடிகை ஷோபனா அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் நடித்தவர். கிளாசிகல் டான்சரான இவர், நடனத்தின்மீது கொண்ட ஆர்வத்தால் திருமணமே செய்துக் கொள்ளவில்லை. தற்போதும் படங்களில் நடித்துவரும் ஷோபனா கடந்த ஆண்டில் வெளியான கல்கி 2898 ஏடி படத்திலும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார்.
நடிகை பத்மினியின் நெருங்கிய உறவினரான ஷோபனா ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ரஜினியுடன் இவர் நடித்த தளபதி, சிவா படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன குறிப்பாக தளபதி படத்தின் சுந்தரி கண்ணால் ஒரு சேதி என கண்களாலேயே கவிதை பாடியவர் ஷோபனா.

நடிகை ஷோபனா: நடிகை ஷோபனா பிரபல நடிகை பத்மினியின் நெருங்கிய உறவினர். கிளாசிகல் டான்சரான இவர் 80களின் காலகட்டங்களில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ள இவர் கமல்ஹாசனின் 125வது படத்தில் நடித்துள்ளார். தன்னுடைய சிறு வயதில் அதாவது 7 -8 வயதிலேயே தான் வீட்டிற்கு தெரியாமல் கமல்ஹாசனின் அதிகமான படங்களை தனியாக சென்று பார்த்துள்ளதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ஷோபனா தெரிவித்துள்ளார்.
தளபதி படம்: கமல்ஹாசனின் 125வது படமான எனக்குள் ஒருவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள ஷோபனா, ஒரு ரசிகையாக 7 வயதிலேயே தனியாக மைலாப்பூருக்கும் லஸ், அடையார் உள்ளிட்ட இடங்களுக்கும் தான் பஸ்ஸில் ஏறி தனியாக சினிமா பார்க்க சென்றதை தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் தளபதி படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும்போது தனக்கு 20 வயதுதான் ஆகியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மலையாளத்தில் 20 நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து விடுவார்கள் என்றும் ஆனால் தளபதி படத்தின் சூட்டிங்கை தன்னுடைய கால்ஷீட்டை தாண்டி மணிரத்னம் எடுத்ததாகவும் ஷோபனா தெரிவித்துள்ளார்.
ஷோபனாவை அழவைத்த மணிரத்னம்: சூட்டிங்கிற்கு வரும் மணிரத்னம், இன்னும் கொஞ்சம் ஷுட் செய்ய வேண்டும் என்றும் ஆனால் இன்றைக்கு வேண்டாம் நாளைக்கு எடுக்கலாம் என்று சொல்லுவார் என்றும் ஷோபனா தெரிவித்துள்ளார். வீட்டிற்கும் அனுப்பாமல் தொடர்ந்து இரு தினங்கள் தன்னை அலைகழித்ததாகவும் இதனால் தனக்கு ஒரு கட்டத்தில் அழுகையே வந்துவிட்டதாகவும் ஷோபனா தற்போது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தில் நடிக்க ரஜினிகாந்தே மிகவும் சிரமப்பட்டதாக முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார். அவரது எதிர்பார்ப்பின்படி நடிக்க முடியாமல் திணறிய அவர், பின்பு கமல்ஹாசனின் அறிவுரைப்படி படத்தில் நடித்ததாக கூறியுள்ளார்.
கொண்டாட வைத்த இளையராஜா: நடிகர் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா, பானுப்பிரியா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான தளபதி படம் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக தற்போதும் உள்ள படம். மகாபாரதத்தில் துரியோதனன் -கர்ணன் நட்பை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டியின் நட்பு மிகப்பெரிய வரவேற்பை படத்தில் பெற்றது. குறிப்பாக இந்தப் படத்தின் மற்றொரு ஹீரோவாக இசையமைப்பாளர் இளையராஜா காணப்பட்டார். யமுனை ஆற்றிலே, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, போன்ற பாடல்கள் காதலுக்கும் காதல் தோல்விக்கும் சாட்சியாக அமைந்த நிலையில், காட்டுக்குயிலு பாடல் கொண்டாட்டமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications











