சமந்தா என்னோட Soulmate.. பாராட்டி தள்ளிய நடிகை ஷோபிதா துலிபாலா!
சென்னை: நடிகை ஷோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களின்மூலம் தமிழ் ரசிகர்களையும் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தவர். அவர் நடித்த படங்களை காட்டிலும் அவருக்கும் நாக சைத்தன்யாவுக்கும் இடையிலான காதல் மற்றும் சமீபத்தில் நடந்த நிச்சயதார்த்தம் அவரை ரசிகர்களிடையே அதிகமாக கொண்டு சேர்த்துள்ளது,
நடிகை சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யாவிற்கு இடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சமந்தாவை தன்னுடைய சோல்மேட் என்று சோபிதா துலிபாலா குறிப்பிட்டுள்ளார். சமந்தா வேறு யாருமில்லை சோபிதாவின் தங்கை. மருத்துவரான இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் அந்த திருமணத்தில் சோபிதாவும் பங்கேற்று பல்வேறு கொண்டாட்ட வீடியோக்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

நடிகை ஷோபிதா துலிபாலா: நடிகை சோபிதா துலிபாலா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இவரது நடிப்பில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தமிழ் ரசிகர்களிடையே பெற்றுக் கொடுத்துள்ளது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நாக சைத்தன்யாவுடன் இவருக்கு நடந்த நிச்சயதார்த்தமும் இவருக்கு மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. நாக சைத்தன்யாவுடன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்தவர் ஷோபிதா துலிபாலா.
ஷோபிதா -நாக சைத்தன்யா நிச்சயதார்த்தம்: கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இது குறித்து நடிகரும் நாக சைத்தன்யாவின் அப்பாவுமான நாகார்ஜுனா அறிவித்திருந்தார். இதையடுத்து, தான் எதிர்பார்த்தது போலவே தன்னுடைய நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக, ஆடம்பரங்கள் எதுவும் இல்லாமல் நடந்ததாக ஷோபிதாவும் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சமந்தா குறித்து ஷோபிதார் பேசியுள்ள கருத்துக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சமந்தா ஷோபிதா துலிபாலாவின் தங்கை. மருத்துவரான இவருக்கு கடந்த ஆண்டில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஷோபிதா தங்கை சமந்தா: ஷோபிதாவின் நிச்சயதார்த்தத்திற்கு முன்னதாகவே சமந்தாவின் திருமணம் நடந்த நிலையில், தொடர்ந்து தன்னுடைய படங்களின் கமிட்மெண்ட் காரணமாக தன்னுடைய குடும்பத்தினரை பார்க்காமல் இருந்த ஷோபிதா, இந்த திருமணத்தின்மூலமும் அடுத்தடுத்த நிகழ்வுகளாலும் குடும்பத்தினருடன் மிகவும் அன்னியோன்யமாக பழகும் வாய்ப்பு ஷோபிதாவிற்கு கிடைத்தது. தன்னுடைய தங்கையும் தானும் மிகவும் அருமையான நண்பர்கள் என்றும் தன்னுடைய Soulmate, தனது தங்கை சமந்தா தான் என்றும் சோபிதா தற்போது தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஷோபிதா, பல்வேறு கொண்டாட்ட வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
விரைவில் திருமணம்: இந்நிலையில் விரைவில் ஷோபிதா துலிபாலா மற்றும் நாத சைத்தன்யாவின் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக தன்னுடைய நிச்சயதார்த்தத்தின்போது தான் அடுத்த ஜென்மத்திலும் தன்னுடைய பெற்றோருக்கே மகளாக பிறக்க வேண்டும் என்றும் தன்னுடைய தங்கை சமந்தா நாயாக பிறந்தாலும் பரவாயில்லை என்றும் ஷோபிதா கூறியிருந்தார். அந்த வகையில் இவர்களின் அன்னியோன்யம் காணப்பட்டது. இந்நிலையில், இவர் சமந்தாவை மறைமுகமாக கூறியதாகவும் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











