Shobitha Dhulipala: மாமனார் வீட்டுடன் தீபாவளி கொண்டாடிய ஷோபிதா துலிபாலா.. தல தீபாவளி ரிகர்சல்?

ஐதராபாத்: நடிகர் நாக சைதன்யா சமந்தாவுடனான பிரிவுக்குப் பிறகு சில மாதங்கள் ஷோபிதா துலிபாலாவுடன் டேட்டிங்கில் இருந்தார். தொடர்ந்து இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இருவரின் நிச்சயதார்த்தமும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடந்து முடிந்துள்ளது இதன் கலர்ஃபுல் புகைப்படங்களை வெளியிட்டு நிச்சயதார்த்தத்தை நாக சைத்தன்யாவின் அப்பாவும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா அறிவித்திருந்தார்.

மிகவும் எளிமையான முறையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக திருமணத்திற்கு ஷோபிதா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் தயாராகி வருகின்றனர். இதையொட்டி குடும்பத்தினருடன் பல சடங்குகளில் ஷோபிதா துலிபாலா ஈடுபட்டு வருகிறார். இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்துள்ளன.

naga chaithanya sobhita dhulipala diwali

நடிகை ஷோபிதா துலிபாலா: நடிகை சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு ஷோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய உள்ளார் நடிகர் நாக சைத்தன்யா. இதையொட்டி இருவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதை சமூக வலைதளங்களில் அறிவித்த நாக சைத்தன்யாவின் அப்பாவும் நடிகருமான நாகார்ஜுனா, இதன் கொண்டாட்ட புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து நாக சைதன்யாவுடன் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினரிடம் மிகவும் இணக்கமாக காணப்படுகிறார் ஷோபிதா. அடுத்தடுத்து உற்சாகமான கொண்டாட்டங்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

தீபாவளி கொண்டாட்டம்: திருமணத்தை ஒட்டி அதன் சடங்குகளும் துவங்கப்பட்டுள்ளன. இதன் புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ஷோபிதா துலிபாலா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் தற்போது தீபாவளியை தன்னுடைய மாமனார் குடும்பத்தினருடன் இணைந்து ஷோபிதா துலிபாலா கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதன் கலர்ஃபுல் புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் நாக சைத்தன்யா, நாகார்ஜுனா, அமலா உள்ளிட்டவர்களும் காணப்படுகின்றனர்.

சிரஞ்சீவியுடன் மீட்டிங்: மிகவும் கொண்டாட்டத்துடன் அனைவரும் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் நாகார்ஜுனா, ஷோபிதா துலிபாலா மட்டுமில்லாமல் நாக சைத்தன்யா ஆகியோரும் நடிகர் சிரஞ்சீவியுடன் பேசி மகிழ்ந்ததன் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதன் வீடியோவையும் ஷோபிதா துலிபாலா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அனைவரும் மகிழ்ச்சியுடன் பேசுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. சமந்தாவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த நாக சைத்தன்யா, ஷோபிதா துலிபாலாவுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாகவே அவரை பிரிந்ததாக கூறப்படுகிறது.

திருமண கொண்டாட்டம்: ஆனால் இது குறித்து அவர் வாய் திறக்காமல் உள்ளார். எது எப்படியோ நாக சைத்தன்யா மற்றும் ஷோபிதா துலிபாலாவின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த திருமணத்தில் டோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முன்னதாக இவர்களின் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாகவே நடத்தி முடிக்கப்பட்டது. இதுபோல நடப்பதே தனக்கு பிடித்தமானது என்று ஷோபிதாவும் கமெண்ட் செய்ததை பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X