Shobitha Dhulipala: அச்சச்சோ.. கழண்டு விழுந்துடாம பிடிச்சிக்கிட்ட சோபிதா துலிபாலா!
சென்னை: நடிகை சோபிதா துலிபாலா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் நாக சைத்தன்யாவிற்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதை கொண்டாட்ட புகைப்படங்களுடன் நடிகர் நாகார்ஜுனா அறிவித்திருந்தார். தொடர்ந்து சோபிதா படங்களில் நடிப்பார் என்றே தெரிகிறது.
இந்நிலையில் அடுத்தடுத்த சினிமா நிகழ்ச்சிகளில் சோபிதா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் ஜோடியாக பங்கேற்று வருவதையும் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. இதனிடையே இவர்களது திருமண ஏற்பாடுகளையொட்டி சடங்குகள் நடத்தப்பட்டு அதிலும் இவர்கள் பங்கேற்று வருகின்றனர். இதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

நடிகை சோபிதா துலிபாலா: நடிகை சோபிதா துலிபாலா, நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்யவுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவருக்கும் நாக சைத்தன்யாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளை நாகார்ஜுனா குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண சடங்குகள்: திருமணத்தையொட்டி நடந்துவரும் சடங்குகளிலும் சோபிதா துலிபாலா மட்டுமில்லாமல் நாக சைத்தன்யாவும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் தனித்தனியாகவும் இணைந்தும் போட்டோ ஷூட்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஒருபுறம் திருமண சடங்குகளின் புகைப்படங்களையும் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சினிமா நிகழ்வுகளிலும் அடுத்தடுத்து இவர்கள் இருவரும் பங்கேற்று வருவதை பார்க்க முடிகிறது. சமீபத்தில் நாகார்ஜுனா, சிரஞ்சீவி, நாக சைத்தன்யா, சோபிதா துலிபாலா ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலகலப்பாக பேசியதை பார்க்க முடிந்தது.
கவர்ச்சி உடையில் சோபிதா: இந்நிலையில் சோபிதா துலிபாலா நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து பங்கேற்று உள்ளார். இதன்போது அவரது ஸ்ட்ராப்லெஸ் கவுன் நழுவிவிடாதபடி அவர் பாதுகாப்பாக தூக்கி இழுத்து விட்டதை பார்க்க முடிந்தது. இதை பார்த்த ரசிகர்கள் அவர் ஹாட்டாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் நாக சைத்தன்யா கொடுத்து வைத்தவர் என்றும் கமெண்ட் செய்ததை பார்க்க முடிந்தது. திருமணத்திற்கு தயாராகி வரும் இவர் இப்படி அதிகமான கவர்ச்சியுடன் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து வருவது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
வெறுப்பேற்றும் சோபிதா?: நாக சைத்தன்யாவை திருமணம் செய்யவுள்ள சோபிதா துலிபாலா அவரை எப்படியெல்லாம் வெறுப்பேற்ற முடியுமோ அப்படியெல்லாம் வெறுப்பேற்றி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சோபிதாவின் தங்கை சமந்தாவை குறிப்பிட்டு அவர் நாயாக பிறக்க வேண்டும் என்று முன்னதாக சோபிதா பதிவிட்டது மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த கருப்புநிற உடையில் சோபிதா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த உடையும் முன்னதாக திருமணத்தின்போது சமந்தா அணிந்த உடையை நியாபகப்படுத்துவதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











