சமந்தாவுடன் நடித்த படம்தான் பிடிக்கும்.. கணவர் நாக சைத்தன்யாவின் படங்கள் குறித்து பேசிய சோபிதா!

நடிகை சமந்தாவுடனான விவாகரத்திற்கு பிறகு சோபிதா துலிபாலாவை கடந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டார் நாக சைத்தன்யா. இவர்கள் இருவரின் ஜோடி சிறப்பாக பார்க்கப்படுகிறது. முன்னதாக நாக சைத்தன்யா மற்றும் சமந்தாவின் ஜோடியும் மாஸ் காட்டிய நிலையில் அவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே நிறைவடைந்தது.

நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் இணைந்தும் தனிதனியாகவும் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய கணவர் நடிப்பில் வெளியான படங்களில் தனக்கு மிகவும் பிடித்த மற்றும் பிடிக்காத படங்கள் குறித்து சோபிதா துலிபாலா பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

shobitha dhulipala naga chaitanya samantha

நாக சைத்தன்யா -சோபிதா ஜோடி: நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைத்தன்யா தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகராக அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாய் பல்லவியுடன் நாக சைத்தன்யா இணைந்து நடித்துள்ள தண்டேல் படம் வெளியாகி வெற்றி படமாக மாறியுள்ளது. சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதைக்களம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்திருந்தார் நாக சைத்தன்யா. முன்னதாக நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், மனக்கசப்பு காரணமாக அவரை பிரிந்தார்.

நாக சைத்தன்யா -சமந்தா பிரிவு: அவர்களது திருமண வாழ்க்கை சில ஆண்டுகள் கூட நீடிக்காத நிலையில் இந்த மணமுறிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இதனிடையே . சமந்தாவை பிரிந்த நாக சைத்தன்யா சோபிதா துலிபாலாவையும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் சிறப்பாக நடந்தது. சிறப்பான ஜோடியாக பார்க்கப்படும் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து இணைந்தும் தனித்தனியாகவும் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தண்டேல் படத்தின் பிரமோஷனிலும் சோபிதா குறித்த சுவாரஸ்யங்களை நாக சைத்தன்யா பகிர்ந்திருந்தார்.

கணவர் குறித்து சோபிதா: இந்நிலையில் தன்னுடைய கணவர் நாக சைத்தன்யா நடிப்பில் வெளியான படங்கள் குறித்து சோபிதா துலிபாலா பேட்டியொன்றில் பேசியுள்ளார். இதில் நாக சைத்தன்யா நடித்து தனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத படங்கள் குறித்து அவர் பேசியுள்ளார். நாக சைத்தன்யா நடிப்பில் வெளியான பெஜவாடா படம் தனக்கு பிடிக்காது என்றும் நாக சைத்தன்யாவிடம் ஏன் இது போன்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்தீர்கள் என்று தான் கேள்வி எழுப்பியதாகவும் சோபிதா துலிபாலா தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கணவர் நடித்துள்ள காதல் படங்கள் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சோபிதாவிற்கு பிடித்த நாக சைத்தன்யா படம்: நாக சைத்தன்யா அவரது முன்னாள் மனைவியான சமந்தாவுடன் இணைந்து நடித்த ஏ மாய சேசாவே படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சோபிதா துலிபாலா தெரிவித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டில் நாக சைத்தன்யா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியானது ஏ மாய சேசாவே படம். இந்தப் படத்தை கெளதம் மேனன் இயக்கியிருந்தார். படத்தில் நாக சைத்தன்யா மற்றும் சமந்தாவின் ஜோடி மிகச்சிறப்பான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியது. தமிழில் சிம்பு -திரிஷா நடிப்பில் இந்தப் படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் இந்தப் படத்தை கௌதம் மேனனே இயக்கியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X