'சுயசார்பை அடுத்த லெவலுக்கு கொண்டு போயிட்டீங்களே..' தமிழ்ப் பாடலுக்கு பாலிவுட் ஹீரோயின் டான்ஸ்!

By

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை தமிழ்ப் பாடலுக்கு ஆடியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

தமிழ்ப் பாடலுக்கு பாலிவுட் ஹீரோயின் டான்ஸ்! - வீடியோ

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கு

ஊரடங்கு

ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் இந்த கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், நடிகைகள், இன்ஸ்டாகிராமை போட்டோக்களால் நிரப்பி வருகிறார்கள்.

ஒர்க் அவுட்

ஒர்க் அவுட்

வீட்டில் இருந்தபடி, தாங்கள் செய்யும் ஒர்க் அவுட் வீடியோ, யோகா மற்றும் டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். சில நடிகர், நடிகைகள், சமையல் செய்யும் வீடியோக்களை பகிர்கின்றனர். சிலர், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்லி வருகின்றனர்.

பாலிவுட் ஹீரோயின்

பாலிவுட் ஹீரோயின்

லாக்டவுன் அனைவரையும் மொத்தமாக மாற்றி இருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடும் பாலிவுட் ஹீரோயின் ஸ்ரத்தா தாஸ், இப்போது தமிழ்ப் பாடல் ஒன்றுக்கு ஜாலியாக டான்ஸ் ஆடி, வீடியோ வெளியிட்டுள்ளார்.
கேப்ஷனாக, பிரதமர் மோடி, ரூ.20 லட்சம் கோடி சுயசார்பு திட்டம் பற்றி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

ஜென்டில்மேன்

ஜென்டில்மேன்

அதற்கான எனது ரியாக்சன் இது என்று கூறியுள்ளார் ஸ்ரத்தா தாஸ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவர், ஷங்கரின் ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்றுள்ள ஒட்டகத்தைக் கட்டிக்கோ, கெட்டியாக ஒட்டிக்கோ' பாடலுக்கு ஆடியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த இந்தப் பாடலுக்கு அர்ஜுனும், மதுபாலாவும் படத்தில் ஆடியுள்ளனர்.

அடுத்த லெவல்

அடுத்த லெவல்

இதற்கு ரசிகர்கள் தாரளமாக தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒருவர், நீங்க ஆடியிருக்கிறதுக்கு பெயர் dangdut டான்ஸ். இந்தோனேஷியாவுல இது பிரபலம் என்று கூறியுள்ளார். சுயசார்பை அடுத்த லெவலுக்கு கொண்டு போயிட்டீங்களே? என்று ஒருவர் கூறியுள்ளார். ஒரு விஜய் ரசிகர், எங்க தளபதி கூட நடிங்களேன் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

தமிழில் மிரட்சி

தமிழில் மிரட்சி

நடிகை ஸ்ரத்தா தாஸ். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் நடித்துள்ள ஸ்ரத்தா, தமிழில், ஜித்தன் ரமேஷ் வில்லனாக நடித்துள்ள மிரட்சி படத்தில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X