இதை விடுங்க... அதுல இன்னும் டெர்ரரா இருப்பீங்க... டூ பீஸ் ஹீரோயினை வசமாகக் கலாய்க்கும் ரசிகர்கள்
மும்பை: பிரபல ஹீரோயின் வெளியிட்டுள்ள டூ பீஸ் புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரத்தா தாஸ்.
தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

படங்கள் இல்லை
இந்தி மற்றும் தெலுங்கில் நடித்துவரும் ஸ்ரத்தாவுக்கு சமீபகாலமாகப் படங்கள் இல்லை. இதனால் மற்ற நடிகைகளை போல, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
டூ பீஸ் உடை
இப்போது, அவர் டூபீஸ் உடையில் கடற்கரை தண்ணீரில் நடந்து வருவது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இதை பல ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சிலர், கடுமையாக விமர்சித்துள்ளனர்.

டெர்ரரா இருக்கீங்க
ஒரு ரசிகர், இந்த மாதிரி தம்மாத்துண்டு டிரெஸ்ல எல்லாம் நீங்க நல்லாவேயில்லை. முழு டிரெஸ் போட்டுட்டு வரும்போதுதான் டெர்ரரா இருக்கீங்க... என்று கலாய்த்துள்ளார்.

ஏன் அதையும்
மற்றொரு ரசிகர், நீங்க ரொம்ப மோசம், இப்படியா டிரெஸ் பண்ணுவீங்க? என்று கேட்டுள்ளார். இன்னொரு ரசிகர், 'அதாம் எல்லாத்தையும் காண்பிச்சாச்சே... ஏன் அதையும் உடுத்திக்கிட்டு? என்று கோபமாகக் கூறியுள்ளார். வேறொருவர், எல்லாம் செயற்கை அழகு... போம்மா என்று கேலியாகத் தெரிவித்துள்ளார்.

வெளிய வந்திருங்க
'தண்ணில இருந்து சீக்கிரமா வெளிய வந்திருங்க ஸ்ரத்தா... அது, அநியாயத்துக்கு ஹாட் ஆயிடப் போகுது' என்று ஒருவர் கலாய்த்துள்ளார். இதே போல இன்னும் சில ரசிகர்களும் ஸ்ரத்தாவை வித்தியாசம் வித்தியாசமாக விமர்சித்தும் அழகை வர்ணித்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











