twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பாதிச்சும் திருந்தலையாடா நீங்க.. சீனர்களை வெளுத்து வாங்கிய பாலிவுட் நடிகை!

    |

    மும்பை: கொரோனா பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சீனர்கள் மீண்டும் இறைச்சி சந்தையில் வவ்வால், பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி என பலவற்றையும் விற்று வரும் செய்தி பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸை எரிச்சல் ஊட்டியுள்ளது.

    Recommended Video

    களத்தில் இறங்கிய தளபதி ரசிகர்கள்.. தினக் கூலிகளின் பட்டினியை போக்க மாஸ் நடவடிக்கை! - வீடியோ

    சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் உருவாகி உலகம் முழுவதும் பரவியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

    Actress Shraddha Das scolding Chinese for eat bats and meats again!

    சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    ஆனால், கொரோனா தாக்கத்தால், சீனாவை விட இத்தாலி மற்றும் அமெரிக்கா கடும் விளைவுகளையும் பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்களை பலிகளையும் சந்தித்துள்ளன.

    இந்நிலையில், சீன அரசு எடுத்த கடும் நடவடிக்கை மற்றும் தலை சிறந்த மருத்துவர்களின் அயராத உழைப்பினால், மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

    ஆனால், நிலைமை முழுமையாக கட்டுக்குள் வருவதற்கு முன்னதாக, மீண்டும் சந்தைகளில் வவ்வால், பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி உள்ளிட்டவை விற்கப்பட்டு வருகின்றன.

    இந்த செய்தி குறித்து அறிந்த பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ், இப்போதானே அந்த கொடிய வைரஸ் நோயில் இருந்து கொஞ்சம் தப்பிச்சு இருக்கீங்க, உங்களால் தான் உலகம் இன்னும் கவலைக்கிடமாக இருக்கு, அறிவே இல்லையா என ஆபாச வார்த்தைகளில் திட்டித் தீர்த்துள்ளார். மேலும், மனித கறிகளையும் அவர்கள் சமைத்து சாப்பிடுவதாகவும் வெளுத்து வாங்கி உள்ளார்.

    அவரது பதிவுக்கு கீழே லாக் டவுனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வரும் இந்தியர்களும் இணைந்து கொண்டு சீனர்களை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    English summary
    Bollywood actress Shraddha Das scolding Chinese markets started once again the sales of Bats, Rats, Scorpions, Snakes and Cockroaches despite of Corona pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X