முதல் படத்திலேயே இத்தனை கோடிகளா.. இளம் நடிகையின் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கும் சீனியர் நடிகைகள்!
சென்னை: இளம் நடிகை ஒருவரின் சம்பளத்தை கேட்டு சக நடிகைகள் வாயை பிளந்துள்ளனர்.
பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.
பெத்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்காக நடிகர் பிரபாஸ்க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் குழுவோ அல்லது பிரபாஸ் தரப்போ இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை.

ரூ.7 கோடி சம்பளம்
இந்நிலையில் அந்தப்படத்தில் அறிமுகமாகும் நாயகிக்கும் ஒரு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது நடிகை ஷ்ரத்தா கபூல் சாஹோ படத்திற்காக 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

முதல் படத்திற்கு
இந்தி படங்களில் நடிக்க 2 கோடி ரூபாய் சம்பளமாக பெறும் ஷ்ரத்தா கபூர் தனது முதல் படமான சாஹோ படத்திற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

அதிகளவாக ரூ.4 கோடி
அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அவர்களும் அதிகளவாக 4 கோடிக்கு மேல் வாங்கியதாக தெரியவில்லை.

வாயை பிளக்கும் நடிகைகள்
இந்நிலையில் முதல் படத்திலேயே ஷ்ரத்தா 7 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருப்பது சீனியர் நடிகைகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏற்கனவே படத்தின் ஹீரோ பிரபாஸ் 100 கோடி ரூபாயை பெற்று பாலிவுட், கோலிவுட் சூப்பர் ஸ்டார்களை எல்லாம் அதிரச் செய்தார். இந்நிலையில் படத்தின் ஹீரோயினும் சக நடிகைகளை வாயை பிளக்க செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











