ஜிகுஜிகு புடவையில் ஏங்க வைக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ... சொக்கிப்போன ரசிகர்கள் !
சென்னை : பார்ப்பதற்கு சிக்குனு ஆளை கொள்ளும் அழகில் தேவதையாக மின்னும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஜிகு ஜிகு உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரின் இதயத்தை கவர்ந்துள்ளது.
இதுவரைக்கும் எத்தனையோ போஸ்ட் போட்டிருந்தாலும் இந்த போஸ்ட் தான் எல்லாவற்றையும்விட அசத்தி விட்டது என அசந்து போன ரசிகர்கள் உருகி வருகிறார்கள்.
சேலையில், வளைந்து நெளிந்து லுக்குவிட்டுள்ள ஷ்ரத்தாவை பார்த்து, நாங்க வேணா உதவிக்கு வரவா? என ஓடோடி வரும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் அறிமுகம்
வழக்கறிஞரான ஷ்ரத்தாஸ்ரீநாத் ஆரம்ப காலத்தில் விளம்பரத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இதில் கிடைத்த வரவேற்பை அடுத்து, முதன் முறையாக யூ டர்ன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த திரைப்படம், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுத்தந்தது.

துணிச்சலான கதாபாத்திரம்
இதையடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை, இவன் தந்திரன் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு, விஜய்சேதுபதி, மாதவன், வரலட்சுமி நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் மாதவனின் மனைவியாக நடித்து அனைத்து தரப்பு மக்களிடமும் இடம் பிடித்தார்.

பட வாய்ப்புகள்
நடிகர் அஜித்குமார் நடித்த நேர்கொண்டபாதை திரைப்படத்தில் துணிச்சலான சவால் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது. இந்த திரைப்படத்தை அடுத்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

ஜிகு ஜிகு புடவையில்
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷ்ரத்தாந ஸ்ரீநாத் ஜிகு ஜிகு புடவையில் இளசுகளின் இதயத்தை சொக்கவைக்கும் அழகில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான சிறிது நேரத்திலேயே பலர் மனதை வென்றுள்ளது.
Recommended Video

நயன்தாராவுக்கு பதிலாக
தற்போது ஷ்ரத்தாந ஸ்ரீநாத் , யுவராஜ் தயாளன் இயக்க உள்ள ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











