தங்க நிற க்ளிட்டர் புடவையில் மாதவன் பட நடிகை.. பார்க்கும் போதே பக்குனு ஆயிடுச்சு!

சென்னை: நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் தங்க நிற புடவையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கோஹினூர் என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ஷ்ரதா.தமிழில் இவன் தந்திரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி,கன்னடம்,போன்ற பல மொழிகளில் தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார்.

விக்ரம் வேதா

விக்ரம் வேதா

காற்று வெளியிடை படத்தில் சிறிய கவுரவ வேடத்தில் நடித்த ஷ்ரதா,இவன் தந்திரன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார்.அந்த படத்தில் கவுதம் கார்த்திக்,ஆர்.ஜே.பாலாஜி போன்ற பலரும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு விக்ரம் வேதா திரைப்படம் இவரை அடையாளம் காட்டியது.அப்படத்தில் வக்கீலாக நடித்து இருக்கும் ஷ்ரதா மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.அந்த படத்தில் விஜய் சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளனர் .

அஜித்துடன் இணைந்து

அஜித்துடன் இணைந்து

விக்ரம் வேதாவை தொடர்ந்து கே-13 என்ற படத்தில் நடித்தார்.அந்த படத்தில் அருள்நிதி நாயகனாக நடித்தார்.அப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.பிறகு இவரது நடிப்புக்கு தீனி போட்ட படம் தான் நேர்கொண்ட பார்வை.ஹிந்தியில் வெளிவந்த பிங்க் பட ரீமேக் தான் இந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் .அஜித் வக்கீலாக நடிக்க,ஷ்ரதா,அபிராமி,போன்ற பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.வருமான ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் இப்படம் வெற்றியை பெற்றது.

மாறா ஓவியம்

மாறா ஓவியம்

தமிழில் நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு ஷ்ரத்தா நடித்த படம் தான் மாறா,மாதவனுடன் மீண்டும் இணையும் வாய்ப்பு கிடைத்தது.இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.மாதவன் மற்றும் ஷ்ரதா இணைந்து தங்களது எதார்த்த நடிப்பால் மாறா படத்திற்கு உயிர் கொடுத்தனர் என்று சொன்னால் அது மிகையாகாது.இப்படம் ஓவியத்தை மையமாக வைத்து அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது கலியுகம் படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

தமிழ் ரசிகர்களுக்கு ஏத்த மாதிரி மாத்திருக்கோம் | ACTRESS SSHIVADA CHAT PART -01 | FILMIBEAT TAMIL
வித்யாசமான சிந்தனை

வித்யாசமான சிந்தனை

எப்போதும் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தில் கவனத்துடன் இருக்கும் ஷ்ரதா சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது தனது வித்யாசமான புகைப்படங்களையும் வெளியிடுவார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.தங்க நிற க்ளிட்டர் புடவையில் இருக்கும் ஷ்ரதா ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து உள்ளார்.புடவையிலும் கவர்ச்சியை காட்டும் ஷ்ரதாவுக்கு ரசிகர்கள் ஹாட் இமோஜிக்களை கொடுத்து வருகின்றனர்.பார்க்கும் போதே பக்குனு இருக்கு ஜாக்கெட் போட்டு இருக்கீங்களா இல்லையா? என்ற கேள்வியையும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X