இப்போதைக்கு கல்யாண ஐடியாவே இல்லை...- 'கோடை மழை' ஸ்ரீ ஜா!

By Shankar

கிராமப்புறங்களில் திருமணம் நடத்துபவர்கள் இன்றும் கூட திருமணத்துக்கு தேவையானவற்றை தாங்களே பார்த்துப் பார்த்து வாங்குகிறார்கள்.. திருமண ஏற்பாட்டிற்கான ஒவ்வொரு விஷயத்தையும் தாங்களே தேர்வு செய்து தங்கள் விருப்பப்படி திருமண வைபவத்தை நடத்துகிறார்கள்.

ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு திருமண ஏற்பாடு என்பது மலைப்பை தரும் விஷயமாகத்தான் இருக்கிறது.. மண்டபத்தில் ஆரம்பித்து, சாப்பாடு, மணவறை அமைப்பு, மேக்கப் என தனித்தனியாக ஆட்களை தேடுவதும் தேடிக்கண்டுபிடிப்பதும் அவர்களை ஒருங்கிணைப்பதும் சிரமமான ஒன்று.. இதனை கருத்திற்கொண்டுதான் ஆங்காங்கே 'வெட்டிங் பிளானர்கள்' எனப்படும் திருமண ஏற்பாட்டாளர்கள் உருவாக ஆரம்பித்தார்கள்..

Actress Shree Ja speaks about her marriage

முழு திருமணத்தையும் அவர்களே பொறுப்பெடுத்து நடத்திக்கொடுத்து, திருமண வீட்டாரின் சுமைகளை குறைத்தார்கள் என்றாலும், ஒரு திருமண நிகழ்விற்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் அவர்களாகவே கவனித்துக்கொள்வதில் சில சங்கடங்களும் ஏற்பட்டன. அவர்கள் சொன்ன நபர்களைத்தான் ஒப்பந்தம் செய்தார்கள்.. அவர்கள் சொன்னதுதான் செலவு என்கிற நிர்ப்பந்தமும் இருக்கிறது..

இதுபோன்ற மனக்குறைகள் எதுவும் வராமல், அதேசமயம் திருமண வீட்டார் தங்களுக்கு தேவையான ஒவ்வொன்றுக்கும் நேரில் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே பெறுவதற்கான வசதி இருந்தால், அதுவும் ஒரு மொபைல் போனுக்குள்ளேயே அடங்கிவிட்டால் எப்படி இருக்கும்..?

Actress Shree Ja speaks about her marriage

அப்படி ஒரு சிறப்பு வசதியை ஏற்படுத்தி மை கிராண்ட் வெட்டிங் நிறுவனத்தை நடத்திவரும் ஆர்.சரத் என்பவர். திருமண வீட்டாரின் விருப்பப்படி அனைத்தையும் அவர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் 'மை கிராண்ட் வெட்டிங்' என்கிற செயலியை (App) உருவாக்கியுள்ளார்.. 'கங்காரு', 'வந்தா மல', கோடை மழை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நாயகி ஸ்ரீஜா, இந்த செயலியை அறிமுகப்படுத்தினார்.

இந்த செயலியை அறிமுகப்படுத்திய நடிகை ஸ்ரீஜாவிடம் அவரது திருமணம் எப்போது என கேட்டதற்கு, "இன்னும் திரையுலகில் நான் சாதிக்கவேண்டியது நிறைய இருக்கிறது.. அதனால் இப்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கு இடமில்லை.. ஆனால் திருமணம் செய்துகொள்ளும் சமயத்தில் இந்த மை கிராண்ட் வெட்டிங் எனக்கு ரொம்பவே கைகொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்," என்றார்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X