கேமராமேனை புகழ்ந்த ஸ்ரேயா சரண்… லைட்டிங்கில் ஜொலித்த ஸ்ரேயா

ஹைதராபாத் : இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை ஸ்ரேயா சரண்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். திருமணத்திற்கு பிறகு பரவலாக நடிப்பதை குறைத்துக் கொண்டு அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் இந்தியாவின் சிறந்த கேமராமேன் ஆன ஒருவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

நம்பர் ஒன் நடிகை

நம்பர் ஒன் நடிகை

ஸ்ரேயா சரண் 2001ஆம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு சந்தோஷம் எனும் தெலுங்கு படத்தின் மூலம் முதல் ஹிட் கொடுத்தார். அதன்பின்னர் தெலுங்கின் முன்னணி கதாநாயகியாக மாறி நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். தனது க்யூட் நடிப்பால் ரசிகர்களை கிறங்கடித்தார். வரிசையாக பல ஹிட் படங்களை தந்தார். தெலுங்கை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகி தமிழிலும் முன்னணி கதாநாயகியாக மாறினார். ஒருகட்டத்தில் தென்னிந்தியாவின் முதன்மை கதாநாயகியாக வலம் வந்தார் ஸ்ரேயா சரண்.

முன்னணி ஹீரோக்களில் முதல் சாய்ஸ்

முன்னணி ஹீரோக்களில் முதல் சாய்ஸ்

ஸ்ரேயா முன்னணி ஹீரோயினாக வலம் வந்த வேளையில் தென் இந்தியாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, மகேஷ் பாபு, என்டிஆர், பவன் கல்யாண், பிரபாஸ் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழில் ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்தார். விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி, தனுசுடன் திருவிளையாடல் படங்களில் நடித்தார். தென்னிந்தியாவின் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த அரிய சாதனை படைத்துள்ளார் ஸ்ரேயா.

இன்ஸ்டாகிராம் ஆக்டிவ்

இன்ஸ்டாகிராம் ஆக்டிவ்

திருமணத்திற்குப் பிறகு ஸ்ரேயா சரண் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பெரிய இயக்குனர்கள் படங்களில் மட்டும் நடித்து வந்தார். ஆனால் அதை போக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக வலம் வருகிறார். தனது கணவருடன் செய்யும் குறும்புத்தனமான வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதில் பல வீடியோக்கள் வலைத்தளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் தான் பங்குபெறும் சூட்டிங்க் ஸ்பார்ட் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

ஸ்ரேயா பாராட்டைப் பெற்ற கேமராமேன்

ஸ்ரேயா பாராட்டைப் பெற்ற கேமராமேன்

ஸ்ரேயா சரண் தற்போது பங்குபெறும் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கேமராமேன் " Kiran Dehans " யை tag செய்து " எங்கள் உலகத்தில் இதுபோன்ற லைட்டிங் செய்து வண்ண மயம் ஆக்கியதற்கு நன்றி. நீங்கள் ஒரு சிறந்த கேமரா மேன் எனப் புகழ்ந்துள்ளார். இவர் ஜோதா அக்பர், 24, மணிகர்ணிகா, அக்னிபத் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு கேமராமேனாக பணியாற்றியவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X