twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீச்சல் உடையில் படகில் வளைந்து தெளிந்து போஸ்… ஸ்ரேயாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு !

    |

    சென்னை : நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா விதவிதமான போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் பல நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

    தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் கிடைத்த சிறு கதாபாத்திரத்தை துடுப்பாக பிடித்துக்கொண்டு இன்று முன்னணி நடிகையாக முன்னேறி இருக்கிறார் ஸ்ரேயா சரண்.

    ரஜினிகாந்த், ஜெயம் ரவி, விக்ரம், விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறி உள்ளார்.

    தளபதி 66ஐ தள்ளி வைத்த விஜய் ரசிகர்கள்.. லோகேஷ் கனகராஜின் தளபதி 67 அறிவிப்புக்கு பிறகு நடந்த மாற்றம்?தளபதி 66ஐ தள்ளி வைத்த விஜய் ரசிகர்கள்.. லோகேஷ் கனகராஜின் தளபதி 67 அறிவிப்புக்கு பிறகு நடந்த மாற்றம்?

    ஸ்ரேயா

    ஸ்ரேயா

    முன்னணி நடிகையான ஸ்ரேயா, தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இன்ப அதிர்ச்சி

    இன்ப அதிர்ச்சி

    தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான ஸ்ரேயா அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். கர்ப்பமாக இருப்பதை மறைத்து வைத்திருந்த இந்த காதல் தம்பதியினர் திடீரென பெண்குழந்தை பிறந்து இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

    கைவசம் உள்ள படங்கள்

    கைவசம் உள்ள படங்கள்

    குழந்தை பிறப்புக்கு பிறகு திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா தற்போது, கன்னடத்தில் உருவாக உள்ள பான் இந்தியா படமான கப்ஸா திரைப்படத்தில் மதுமதி என்ற அரசு குடும்ப கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உபேந்திரா ஹீரோவாக நடிக்க சுதீப் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகிறது. பான் இந்திய படமான ஆர் ஆர் ஆர் படத்தில் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.

    நீச்சல் உடையில்

    நீச்சல் உடையில்

    இணையத்தில் படுஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா நீச்சல் உடையில் தண்ணீருக்கு நடுவில், வளைந்து நெளிந்து ஒரு கலக்கல் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், எதுக்கு இந்த கவர்ச்சி எல்லாம் படவாய்ப்புக்காக தானே என்று கேட்டு வருகின்றனர். ஸ்ரேயாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Actress Shreya Glamour photos Trending on social media
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X