சுத்தி வளைச்சு படுக்க கூப்பிட்ட இயக்குநர்.. பயிற்சி எடுத்துட்டு வரேன்னு சொன்ன ரஜினி பட நடிகை
சென்னை: தமிழ் சினிமா உலகம் என்றைக்குத்தான் திருந்துமோ என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. எந்த விஷயத்தில் என்றால் நடிக்க வரும் பெண்களை காம இச்சைக்கு பயன்படுத்துபவர்கள் எப்போதுதான் குறைவார்கள் எனத் தெரியவில்லை. உண்மை வெளியே வராத வரை அயோக்கியர்கள் யோக்கியர்கள் போல தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். கடந்த ஆண்டு மலையாள சினிமா உலகில் பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்து கூறினார். இப்படியான நிலையில் நடிகை ஸ்ரேயா குப்தா சென்னையில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
திரையுலகம் மட்டும் இல்லாமல் சின்னத்திரை உலகத்தில் பெண்களை அதாவது நடிக்க முயற்சி செய்யும் திறமையான பெண்களை, எங்களுடன் ஒரு டிரிப் அடிக்க வேண்டி இருக்கும் பரவாயில்லையா? கெஸ்ட் ஹவுஸில் பர்சனல் மீட்டிங் இருக்கும் உங்களுக்கு ஓகேவா? நடிகர் கெமிஸ்ட்ரி எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என பார்க்கனும்னு நினைக்குறாரு, கேமரா மேன், எடிட்டரை பார்த்து கொஞ்சம் பேசிடுங்களே? என என்னென்னமோ சொல்லி நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சில காமவெறி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மேலும் சிலர் நேரடியாக அட்ஜெஸ்மண்ட் இருக்கும் உங்களுக்கு ஓகேவா என கேட்கும் சினிமாக்காரர்களும் உள்ளார்கள்.
இப்படி ஒரு அனுபவத்தை தான் பாலிவுட் நடிகை ஸ்ரேயா குப்தா சென்னையில் தான் சினிமா வாய்ப்பு தேடும் போது அனுபவித்துள்ளார். நடிகை ஸ்ரேயா குப்தா தமிழ் சினிமாவில் மிகவும் குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்துள்ளார். இந்தியில் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆன, சல்மான் கானின் சிக்கிந்தர் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் சூர்யாவின் வாரணம் ஆயிரம், ரஜினிகாந்தின் தர்பார், தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

ஸ்ரேயா குப்தா: இப்படியான நிலையில் நடிகை ஸ்ரேயா குப்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சென்னையில் ஒரு இயக்குநர் என்னை படுக்க நேரடியாக அழைக்காமல் சுற்றிவளைத்து கூப்பிட்டார். நான் அவரிடத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டேன் எனக் கூறியுள்ளார். மேலும் மும்பையில் சென்னையில் என்னை படுக்க கூப்பிட்டது போல யாரும் கூப்பிடவில்லை எனக் கூறியுள்ளார்.
அட்ஜெஸ்மெண்ட்: இது தொடர்பாக அவர் பேசியபோது, நான் சென்னையில் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டு இருந்த காலகட்டம் அது. நானும் எனது அம்மாவும் தான் அப்போது ஒன்றாக இருப்போம். அப்போது எல்லாம் நேரடியாக தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும், நடிகர்களுமே நடிகையை தேர்வு செய்வார்கள். அப்போது ஒரு இயக்குநரை சந்திக்க நானும் எனது அம்மாவும் போயிருந்தோம். அப்போது தயாரிப்பாளரும் உடன் இருந்தார்.



Click it and Unblock the Notifications











