அட என்ன சொல்றீங்கப்பா… அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவரா ஸ்ரேயா?

சென்னை : நடிகை ஸ்ரேயா சரண் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவராக பான் இந்திய திரைப்படத்தில் நடிக்கிறார்.

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் கிடைத்த சிறு கதாபாத்திரத்தை துடுப்பாக பிடித்துக்கொண்டு இன்று முன்னணி நடிகையாக முன்னேறி இருக்கிறார் ஸ்ரேயா சரண்.

ரஜினிகாந்த், ஜெயம் ரவி, விக்ரம், விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறி உள்ளார்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

முன்னணி நடிகையான ஸ்ரேயா, தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும் போதே, ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான ஸ்ரேயா அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். கர்ப்பமாக இருப்பதை மறைத்து வைத்திருந்த இந்த காதல் தம்பதிகள் திடீரென பெண்குழந்தை பிறந்து இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

அரச குடும்ப பெண்ணாக

அரச குடும்ப பெண்ணாக

குழந்தை பிறப்புக்கு பிறகு திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா தற்போது, கன்னடத்தில் உருவாக உள்ள பான் இந்தியா படமான கப்ஸா திரைப்படத்தில் மதுமதி என்ற அரசு குடும்ப கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உபேந்திரா ஹீரோவாக நடிக்க சுதீப் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகிறது.

திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு

திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு

இந்த கதாபாத்திரம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஸ்ரேயா, எனது திறமையை வெளிப்படுத்த இந்த படம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. படத்தின் கதையும் அழகாக அமைந்துள்ளது. பெங்களூருவுக்குத் திரும்பி, மீண்டும் ஒரு கன்னடப் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரத்தையும் இங்குள்ள மக்களையும் நான் விரும்புகிறேன் என்று ஸ்ரேயா கூறினார்.

ஆர்.ஆர்.ஆர் படத்தில்

ஆர்.ஆர்.ஆர் படத்தில்

ஸ்ரேயா இதற்கு முன்பு புனித் ராஜ்குமார் நடித்த கேமியோவில் நடித்துள்ளார், பின்னர் சந்திரா படத்திலும் பிரேமுடன் இணைந்து நடித்தார். இந்தப் படத்தில் பாதாள உலக மன்னனாக நடிக்கும் உபேந்திராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் 1940கள் மற்றும் 1980 களுக்கு இடைப்பட்ட காலத்தைக் கொண்ட கதையாகும். மேலும், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் ஸ்ரேயா பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X