Shriya : ஒரு கோடி சம்பளம் கேட்ட ஸ்ரேயா.. அலறி ஓடிய தயாரிப்பாளர்!

சென்னை : கணிசமான படங்களை கைவசம் வைத்திருக்கும் ஸ்ரேயா சரண், ஒரு கோடி சம்பளம் கேட்டதால், தயாரிப்பாளர் அலறி அடித்து ஓடி உள்ளார்.

எனக்கு 20 உனக்கு 18 படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் ஸ்ரேயா.

தனது திறமையாலும், அழகாலும், விஜய், ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

Actress Shriya Saran asked 1 crore rupees salary for one song

நடிகை ஸ்ரேயா சரண் : தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பினார். விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்திலும், ரஜினிகாந்துடன் சிவாஜி படத்திலும், தனுஷூடன் குட்டி, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

Actress Shriya Saran asked 1 crore rupees salary for one song

கவர்ச்சியில் தாராளம் : ஜெயம் ரவியுடன் இணைந்து இவர் நடித்த மழை திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்த நிலையில், இப்படம் ஸ்ரேயாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே டீன் ஏஜ் ரசிகர்களை கவரும் வகையில்,கவர்ச்சியில் தாராளம் காட்டி இருந்தார். அதன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கொடிகட்டி பறந்த ஸ்ரேயா சரண், ஒரு சில பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சென்றார். பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார்.

Actress Shriya Saran asked 1 crore rupees salary for one song

மியூசிக் ஸ்கூல் : இந்தியில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின், கன்னடத்தில் வெளியான கப்ஸா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. பான் இந்தியத் திரைப்படமாக இப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் பாப்பா ராவ் பிய்யாலா இயக்கத்தில் உருவாகி வரும் மியூசிக் ஸ்கூல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஒரு கோடி சம்பளம் : இந்நிலையில், சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட ஸ்ரேயாவை தயாரிப்பாளர் அணுகிய போது, ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆட ஸ்ரேயா ரூ.1 கோடி சம்பளமாக கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பளத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் அலறி அடித்து ஓடி உள்ளார். படங்களில் நடிப்பதை விட ஒரு ஒரே ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி அதிக சம்பளத்தை வாங்குவது தற்போது சினிமா வட்டாரத்தில் டிரெண்டாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X