வயசு என்னவாக இருந்தா என்ன.. 'நச்' சிரிப்பால் சுண்டியிழுக்கும் ஸ்ரேயா சரண்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண், இந்த முறையும் தனது புதிய புகைப்படங்களால் இணையத்தை கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான போட்டோஷூட் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது.
எளிமையும் எலிகன்ஸும் கலந்த கருப்பு உடையில் கவர்ச்சியாக நடிகை ஸ்ரேயா சரண் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஒரே நேரத்தில் ஈர்த்துள்ளன. அதிக அலங்காரமின்றி, ஸ்டைலிஷ் மேக்கப், கூர்மையான பார்வை மற்றும் கிளாசியான உடைத் தேர்வு ஆகியவை இந்த புகைப்படங்களுக்கு தனி அழகை சேர்த்துள்ளன. "Black is always powerful" என்பதை நிரூபிக்கும் வகையில், ஸ்ரேயாவின் இந்த லுக் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

நடிகை ஸ்ரேயா சரண்: இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன. கமெண்ட் பகுதியில் "Evergreen beauty", "Black magic", "Timeless queen" போன்ற புகழ்ச்சிகள் நிரம்பி வருகின்றன. வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை ஸ்ரேயா சரண் இந்த போட்டோஷூட் மூலம் நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிடித்தனமான நடிகை: தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண், விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். மழை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மழை படத்தில் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்திலும், திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.
இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை, திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு தகுந்த போல ரோலில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் கேமியோ ரோலில் நடித்த மிராய் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூலில் சாதனை படைத்தது.


Click it and Unblock the Notifications











