இலங்கையில் ஸ்ரேயா.. சிவாஜி படத்துல பார்த்த மாதிரியே இருக்காரே.. 43 வயசுன்னு சொன்னா நம்பவா முடியுது!

சென்னை: இந்த மாதம் தனது பிறந்தநாளை இலங்கையில் கொண்டாட முடிவு செய்த நடிகை ஸ்ரேயா தனது குடும்பத்துடன் அங்கே சுற்றுலா செய்து வருகிறார். ரெசார்ட் ஒன்றில் நீச்சல் குளத்தில் குடும்பத்துடன் விளையாடும் போட்டோக்களை தற்போது வெளியிட்டு இன்ஸ்டாகிராம் வாசிகளை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

1982ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பிறந்த நடிகை ஸ்ரேயா கடந்த செப்டம்பர் 11ம் தேதி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த மாதம் முழுவதுமே பிறந்தநாள் கொண்டாட்டத்தை இலங்கையிலேயே தூள் கிளப்பி குடும்பத்துடன் செம ஜாலியாக கழித்து வருகிறார்.

Actress Shriya Saran enjoys her birthday month with family at Sri Lanka and shares some glam pics
Photo Credit:

மிராய் படத்தில் ஹீரோ தேஜா சஜ்ஜாவுக்கு அம்மாவாக நடித்தவரா இவர் என ரசிகர்கள் அவரது லேட்டஸ்ட் பிகினி போட்டோக்களை பார்த்து ஹார்ட்டீன்களை பறக்க விட்டு வருகின்றனர்.

இலங்கையில் ஸ்ரேயா: 2001ம் ஆண்டு இஷ்டம் எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா 2003ம் ஆண்டு தமிழில் வெளியான எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். தருண், த்ரிஷாவுடன் ஸ்ரேயா நடித்து ரசிகர்களுக்கு அப்போதே கவர்ச்சி ட்ரீட் கொடுத்திருந்தார். மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, தோரணை, கந்தசாமி, ஜக்குபாய், ரெளத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரேயா பல ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். தனது பிறந்தநாளை குடும்பத்துடன் இலங்கையில் இந்த மாதம் கொண்டாடி வரும் ஸ்ரேயா அங்கே எடுத்துக் கொண்ட நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சிவாஜில பார்த்த மாதிரியே இருக்காங்க: ஆர்ஆர்ஆர் படத்தில் சிறு வயது ராம்சரணுக்கு அம்மாவாக நடித்த ஸ்ரேயா சமீபத்தில் வெளியாகி 150 கோடி வசூல் செய்த மிராய் படத்தில் ஹீரோ தேஜா சஜ்ஜாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். ஒரு பக்கம் சினிமாவில் சீனியர் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், இன்ஸ்டாகிராமில் இன்னமும் சிவாஜி படத்தில் இடம்பெற்ற "வாஜி வாஜி சிவாஜி" பாடலில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி பொங்க நீந்திக் கொண்டு வருவாரே அப்படியே இருக்கிறார் என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

அழகான குடும்பம்: ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரோ கோஸ்சீவை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயாவுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. ராதா என மகளுக்கு பெயரிட்டு வளர்த்து வருகிறார். தனது அழகான குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் குளித்து விளையாடும் போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X