கிரணை போல ஸ்ரேயா காசு பார்க்கிறாரா?.. போன் நம்பருடன் பண மோசடி.. எச்சரித்த நடிகை

சென்னை: நடிகை ஸ்ரேயா சரண், தனது பெயரைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் தவறான தகவல்களைப் பரப்பும் நபரை சமூக வலைத்தளங்கள் மூலம் கடுமையாக எச்சரித்துள்ளார். "என் பெயரில் எழுதுவதை நிறுத்து. வேறு ஒரு வேலையைப் பார்" என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண் கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு போலியான செய்திகள் அனுப்பப்படுவதாகப் புகார்கள் வந்தன. இந்த மோசடி செய்பவர், தனது புதிய படங்களுக்கான கதைகளைக் கேட்க விரும்புவதாகவும், விரைவில் படப்பிடிப்புக்குத் தயாராக இருப்பதாகவும் கூறி வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், "நான் ஒரு வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்துவதாகக் கூறி என் பெயரில் யார் அவர்களிடம் chat செய்து வருகிறார். அந்த முட்டாள் யார்? இது நான் இல்ல. அது எண் இல்ல, தயவுசெய்து எனது பெயரில் எழுதுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு வேறு ஒரு வேலை இல்லை என்றால், ஒரு வேலையை தேடிக் கொள்ளுங்கள்"என்றும் அவர் கோவத்துடன் அதில் பதிவிட்டுள்ளார்.

Shriya Saran scam
Photo Credit:

நடிகை பெயரில் மோசடி: நடிகை ஸ்ரேயா சரண், அண்மையில் கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் மஞ்சு மனோஜ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'மிராய்' திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சூர்யா நடித்து ரெட்ரோ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஸ்ரேயா சரண் Non Violence என்கிற தமிழ் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு தியேட்டரில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X