42 வயசு ஆச்சு.,. இப்பவுமா இப்படி? கவர்ச்சி உடையில் ஸ்ரேயா.. கண்டு கொள்ளாத கணவர்!

சென்னை: சில நடிகைகள் படவாய்ப்பு வரவேண்டும் என்பதற்காக எதை செய்யுவும் தயாராக இருக்கின்றனர் அந்த வகையில், குழந்தை குட்டி என்று செட்டிலான நடிகை ஸ்ரேயா சரண் தற்போது பட வாய்ப்பு பெறுவதற்காக அதீத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பி முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குறிப்பாக விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு மழை திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

shriya saran photos

நடிகை ஸ்ரேயா சரண்: அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினிக்கு 'ஜோடியாக சிவாஜி படத்திலும், திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்து வெற்றிக் கொடியை பறக்க விட்டு வந்த ஸ்ரேயா, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார்.

shriya saran photos

காதல் திருமணம்: இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவருடன் செம ரொமான்டிக்கான க்யூட் படங்களையும், கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்..

shriya saran photos

42 வயசு: தற்போது இவர் டீ ஷர்ட் அணிந்து கொண்டு முன்னழகு தெரியும் படி இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள், உங்களைப்பார்த்தால் 42 வயது போல தெரியவில்லை என்றும், படவாய்ப்பு இல்லை என்பதற்காக இப்படியா என்றும், வரவர நீங்கள் கிரணுக்கு போட்டியாக கவர்ச்சி போட்டோவை பதிவிடுகிறீர்கள் அதெல்லாம் நல்லாவா இருக்கு என்று கேட்டு வருகின்றனர். நடிகை ஸ்ரேயா கடைசியாக கப்ஸா, த்ரிஷ்யம் 2 (இந்தி) உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு ஸ்ரேயா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X