என் பொண்ணுக்கு பிடித்த அந்த அம்மா.. என்ன ஸ்ரேயா சரண் இப்படி சொல்றாங்க!

சென்னை: நடிகை ஸ்ரேயா சரண் அடுத்தடுத்து ரசிகர்களை தன்னுடைய படங்கள்மூலம் கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல ஆண்டுகளாக இவர் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து சிவாஜி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஸ்ரேயா சரணுக்கு தற்போது திருமணமாகி குழந்தை பிறந்த நிலையிலும் தன்னுடைய அழகையும் கவர்ச்சியையும் சிறப்பாக பராமரித்து வருகிறார். அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்திலும் இவர் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

shriya saran interview tamil cinema

நடிகை ஸ்ரேயா சரண்: நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. தொடர்ந்து பல ஆண்டுகள் ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கவர்ந்து வரும் ஸ்ரேயா சரண் தற்போது திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயான நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். பான் இந்தியா படமாக வெளியான ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா சரண், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்த ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களையும் தன்னுடைய குடும்பத்தினருடன் தான் செலவழிக்கும் தருணங்களின் புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4.6 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவான நிலையிலும் தன்னுடைய உடல் அழகு மற்றும் கவர்ச்சியை மிகச் சிறப்பாக பராமரித்து வருகிறார் ஸ்ரேயா.

மகளுக்கு பிடித்த பாட்டு: தன்னுடைய குழந்தை மற்றும் கணவர் குறித்து அடுத்தடுத்த பதிவுகளை இவர் பகிர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய மகள் குறித்து கொடுத்துள்ள பேட்டியொன்று தற்போது ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தன்னுடைய மகள் அதிகமாக படங்களை பார்ப்பதில்லை என்றும் அவளுக்கு அந்த மொழிகள் தெரியாது என்றும் கூறியுள்ள ஸ்ரேயா, ஆனால் தன்னுடைய மகளுக்கு சிவாஜி படத்தில் வரும் வாஜி வாஜி பாடல் மிகவும் பிடித்தமானது என்று தெரிவித்துள்ளார். வீட்டில் தான் சாதாரணமாக ஒரு சல்வார் போட்டுக் கொண்டு கொண்டை போட்டுக் கொண்டிருப்பதால் அந்தப் பாடலின் காஸ்ட்யூம் அவளுக்கு மிகவும் பிடிக்கும் எறும் கூறியுள்ளார்.

அந்த அம்மாதான் வேண்டும்: இதனால் அந்தப் பாடலை பார்க்கும்போதெல்லாம் அதில் இருக்கும் அம்மா தான் தனக்கு வேண்டும் என்றும் தன்னுடைய மகள் கூறுவார் என்று ஸ்ரேயா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தான் சூட்டிங்கிற்காக போடும் உடைகளை பார்த்துவிட்டு அதேபோல தானும் அணிந்துக் கொண்டு, தான் அம்மா போல இருக்கிறேனா என்று தன்னுடைய மகள் கேட்பதாகவும் ஸ்ரேயா குறிப்பிட்டுள்ளார். அவள் தன்னை மிகவும் மிஸ் செய்வதாகவும் ஆனால் வேலைக்கு செல்லும் பெற்றோர் குறித்து அவளுக்கு தெரிந்துள்ளதாகவும் ஸ்ரேயா சரண் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X