தாறுமாறாக கவர்ச்சியில் ரசிகர்களுக்கு கொக்கி போடும் ஷ்ரேயா சரண்.. சரணடைந்த ரசிகர்கள்!

சென்னை : நடிகை ஸ்ரேயா சரண் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

திருமணமான நிலையிலும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆஸ்கர் விருதை பெற்ற ஆர்ஆர்ஆர் படத்திலும் ஸ்ரேயா நடித்திருந்தார்.

தன்னுடைய தாறுமாறான கவர்ச்சியால் சமூக வலைதளங்களை மட்டுமல்லாமல் பொது நிகழ்ச்சிகளையும் களைகட்டி வருகிறார் ஸ்ரேயா.

நடிகை ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மாறி மாறி நடித்து வருகிறார். நடிகர்கள் விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர். திருமணம் தன்னுடைய கேரியரை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறும் வகையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்றுள்ள ஆர்ஆர்ஆர் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் ஸ்ரேயா.

கப்ஜா படத்தில் ஸ்ரேயா

கப்ஜா படத்தில் ஸ்ரேயா

தொடர்ந்து தற்போது பான் இந்தியா படமாக உருவாகியுள்ள கப்ஜா படத்திலும் ஸ்ரேயா சரண் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் கேஜிஎப் படத்தை காட்டிலும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ஸ்ரேயா தெரிவித்துள்ளார். படத்தில் உபேந்திரா, சுதீப் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஸ்ரேயா. கப்ஜா படத்தில் தைரியமான கேரக்டரில் நடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் சினிமா எப்போதும் ஸ்பெஷல்

தமிழ் சினிமா எப்போதும் ஸ்பெஷல்

தமிழ் சினிமா தனக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான் என்று குறிப்பிட்டுள்ள ஸ்ரேயா, தமிழில் நேரடிப் படங்களில் அதிகமாக நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்றும் அதுபோன்ற வாய்ப்புகள் வந்தால் பயன்படுத்திக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகமாக வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்று கூறியுள்ள ஸ்ரேயா சரண், மேலும் நல்ல கதைக்களத்தை கொண்ட படங்கள் தற்போது அதிகமாகி வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

படத்தேர்வில் கவனம்

படத்தேர்வில் கவனம்

நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் தான் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தன்னுடைய மகள் ராதா, நாளை வளர்ந்து பெரியவளாகும்போது தன்னுடைய படங்களை பார்த்து பெருமைப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். சமூகவலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஸ்ரேயா, அடுத்தடுத்த கவர்ச்சித் தூக்கலான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

கவர்ச்சி புகைப்படங்கள்

கவர்ச்சி புகைப்படங்கள்

அடுத்தடுத்த கவர்ச்சி தூக்கலான படங்களால் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் தீப்பிடித்து எரிகிறது. இந்நிலையில் தற்போது ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறான கவர்ச்சியுடன் அமைந்துள்ளன. முன்னழகையும் பின்னழகையும் ஏத்திக் காட்டும வகையில் அமைந்துள்ள இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X