இந்திய கலாச்சாரத்தை வெளிநாட்டு கணவருக்கு தெரியப்படுத்தும் விஜய் பட நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: நடிகை ஷ்ரேயா சரண் தனது கணவருடன் திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரேயா. அப்படத்தில் ஹீரோவின் கல்லூரி தோழியாக நடித்திருப்பார் ஷ்ரேயா.

தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக

முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக

தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பிஸியாக நடித்து வந்தார் ஷ்ரேயா. தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

மீண்டும் நடிக்க ஆசைப்படும் ஷ்ரேயா

மீண்டும் நடிக்க ஆசைப்படும் ஷ்ரேயா

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் ஷ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஆர்வமாய் உள்ளார். இதற்காக விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார் ஷ்ரேயா.

எகிறும் சிங்கிள்ஸின் பிபி

எகிறும் சிங்கிள்ஸின் பிபி

தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார் ஷ்ரேயா. அதோடு தனது கணவருடன் அவுட்டிங் செல்லும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சிங்கிள்ஸின் பிபியை எகிற வைத்து வருகிறார்.

எல்லை மீறிய வீடியோ

எல்லை மீறிய வீடியோ

அண்மையில் தனது கணவருடன் போட்டிங் சென்ற போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார். எல்லை மீறிய அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பொது இடத்தில் இப்படியா நடந்து கொள்வது என விளாசினர். அதோடு இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஏன் வெளியிட வேண்டும் என்றும் கேட்டு சாடினர்.

திருப்பதி கோவிலில் தரிசனம்

திருப்பதி கோவிலில் தரிசனம்

இந்நிலையில் நடிகை ஷ்ரேயா சரண், தனது கணவருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். ஹில் ஸ்டேஷன், அட்ராக்ட்டிவான இடங்கள் என சினிமா பிரபலங்கள் அவ்வப்போது விடுமுறையில் ஓய்வை கழிப்பது வழக்கமான ஒன்றுதான். அதே நேரத்தில் கோவில், பூஜை, வழிபாடு போன்ற விஷயங்களையும் பிரபலங்கள் தவிர்ப்பது இல்லை.

கணவருடன் ரஷ்யாவில் செட்டில்

கணவருடன் ரஷ்யாவில் செட்டில்

அந்த வகையில்தான் நடிகை ஷ்ரேயாவும் தனது காதல் கணவருடன் திருப்பதி கோவிலில் வழிபாடு செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் ரஷ்யாவில் செட்டிலாகிவிட்டார் ஷ்ரேயா. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரேனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு லாக்டவுன்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் விநாயகர் சதுர்த்தி

மும்பையில் விநாயகர் சதுர்த்தி

லாக்டவுன் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளை பார்சிலோனாவில் செலவழித்த நடிகை ஷ்ரேயா சரண், தற்போது தனது கணவர் ஆண்ட்ரூ கோஷீவுடன் இந்தியா திரும்பியுள்ளார். மும்பையில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய பின் நடிகை ஷ்ரேயா சரணும் அவரது கணவரும் திருப்பதி மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய கோவில்களுக்குச் சென்றனர்.

இந்தியாவின் கலாச்சாரத்தை காட்ட ஆர்வம்

இந்தியாவின் கலாச்சாரத்தை காட்ட ஆர்வம்

கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு சிலம்பரசன் நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்தார் ஷ்ரேயா. அண்மையில் தனது கணவருக்கு, இந்தியாவின் துடிப்பான கலாச்சாரத்தைக் காட்ட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை முன்னிட்டு ஆந்திராவில் பிரபலமான திருப்பதி மற்றும் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து ஷ்ரேயா தனது கணவருடன் தங்களின் யாத்திரையைத் தொடங்கியதாகத் தெரிகிறது.

எகிப்திய பிரமிடுகளுடன் ஒற்றுமை

எகிப்திய பிரமிடுகளுடன் ஒற்றுமை

ஷ்ரேயாவுடனான போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஆண்ட்ரூ, அற்புதமான சிவன் கோவில். மாயா மற்றும் எகிப்திய பிரமிடுகளுடன் நிறைய ஒற்றுமைகளை நாங்கள் பார்த்தோம். நன்றி.. மீண்டும் சந்திப்போம் என பதிவிட்டுள்ளார்.

ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர்

ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர்

இதனிடையே நடிகை ஷ்ரேயா சரண், கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசூரன்' வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

அவர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X