Shriya Saran: ப்யூட்டி குயினாக மாறிய ஸ்ரேயா.. பாத்துங்க கழண்டு விழுந்துடப் போகுது!
சென்னை: நடிகை ஸ்ரேயா சரண் தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.
தமிழில் மழை, சிவாஜி, திருவிளையாடல், குட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர்.
திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ள ஸ்ரேயா சரண், சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து முக்கியமாக கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

ஸ்ரேயா சரணின் புதிய போட்டோஷுட்: நடிகை ஸ்ரேயா சரண், தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயான நிலையில், தன்னுடைய பிட்னசை சிறப்பாக பராமரித்து, தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவருக்கு மட்டும் வயதே ஆகாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் வகையில் இவரது வனப்பு குறையாமல் உள்ளது.
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின்மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். தொடர்ந்து ரஜினி, விஜய், ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து சிவாஜி, மழை, திருவிளையாடல், குட்டி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். திருமணமானாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்துவரும் ஸ்ரேயா நடிப்பில் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சூட்டிங் இல்லாத சமயங்களில் தன்னுடைய பெண் குழந்தையுடன் இவர் தொடர்ந்து நேரத்தை செலவிட்டு வருகிறார். தன்னுடைய படங்களை பிற்காலத்தில் பார்க்கும் தன்னுடைய மகள், பெருமை கொள்ள வேண்டும என்று சமீபத்திய பேட்டியில் ஸ்ரேயா சரண் குறிப்பிட்டிருந்தார். கடந்த 2018ம் ஆண்டில் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை ஸ்ரேயா திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இவர் தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஐதராபாத்தின் பிரபல ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கியிருந்த ஸ்ரேயா, அதன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பிகினி உள்ளிட்ட உடைகளிலும் இவரை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளங்களில் புதிய போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதன் வீடியோவும் இந்த பகிர்வில் வெளியாகியுள்ளது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உடையுடன் அவர் தோன்றியுள்ளார். இடையில் அதிகமான இடைவெளியுடன் இந்த உடை காணப்படுகிறது. இந்த உடையை பார்த்து ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











