கொழுக் மொழுக்கென அடையாளமே தெரியாம மாறிய சூர்யாவின் ரீல் மகள்.. ஐசு பாப்பாக்கு வயசு என்ன தெரியுமா?

சென்னை: மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரியா ஷர்மா. அந்த படத்திற்கு பின் தமிழில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில், அவர்களது மகளாக ஐசு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ள இவர் தனது விதவிதமான போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு என் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜோதிகா, சூர்யா, பூமிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் தான் சில்லுனு ஒரு காதல். இந்த திரைப்படம் ஐஷு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் ஸ்ரியா ஷர்மா. அந்த படத்தில் குறும்பு பேச்சு, துறுதுறு பெண்ணாக அழகாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களில் செல்லப்பிள்ளையாக மாறிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்தார்.

shriya sharma photos

நடிகை ஸ்ரியா ஷர்மா: குழந்தை நட்சத்திரமாக எந்திரன் படத்தில் நடித்த ஸ்ரியா ஷர்மா, 2014ல் வெளியான 'கயாகுடு' என்ற படத்தில் ஹீரோயினாக களமிறங்கினார். அதைத்தொடர்ந்து பில்லு கேமர், நிர்மலா கான்வென்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார். இதில், நிர்மலா கான்வென்ட் என்ற படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. பொதுவாக சினிமாவில் நடிக்க வந்து விட்டால், படிப்பை கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால், திறமையாளரான ஸ்ரியா ஷர்மா நடிப்பையும் படிப்பையும் சரியாக கொண்டு சென்று படிப்பை முடித்து விட்டு வழக்கறிஞராக மாறியுள்ளார்.

பிறந்த நாள் பார்ட்டி: தமிழ் திரைப்படங்களில் இதுவரை எந்த ஒரு திரைப்படங்களிலும் ஹீரோயினாக அறிமுகமாகாத ஸ்ரியா சர்மா, இப்பொழுது சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் அன்பை பெற்று வருகிறார். அந்த வகையில், அண்மையில் தனது 28வது பிறந்த நாளை நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளார். அந்த போட்டோக்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஐசு பாப்பாவா இது... என்னமா வளர்ந்துவிட்டார் என கருத்துக்களை பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நடிகை அனிகா சுரேந்திரன்: இந்த கால கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தவர் தான் அனிகா சுரேந்திரன். அவர், அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் அவரின் மகளாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்தார். அதன் பின் நானும் ரௌடி தான், மிருதன் போன்ற படத்தில் நடித்து வந்த இவர், வளர்ந்து பருவ வயதை அடைந்ததும், புட்டபொம்மா என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார். கதாநாயகியான பின் கவர்ச்சி அதிகமாக காட்ட ஆரம்பித்த அனிகா சுரேந்தர், தமிழில் பிடி சார் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.. தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதில் ஹீரோவாக தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடித்திருந்தார். இந்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X