சூர்யாவின் குட்டி பாப்பாவா இது.. இவ்வளவு அழகாக மாறிட்டாங்களே !

சென்னை : தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் இன்றும் நம் மனதில் குழந்தைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறு நாம் பல படங்களில் பார்த்த பல குழந்தை நட்சத்திரங்கள் தற்போது நாம் ஆச்சரியப்படும் வகையில் வளர்ந்து கதாநாயகர்களாகவும் கதாநாயகிகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சூர்யாவின் மகளாக நடித்த ஸ்ரியா ஷர்மா மளமளவென வளர்ந்து தற்போது ஹீரோயினாக வலம் வர இருக்கிறார்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

பொதுவாக புது புது இயக்குனர்களுக்கு எப்போதும் வாய்ப்பு கொடுத்து வரும் நடிகர் சூர்யா தற்போதுள்ள முன்னணி இயக்குனர்களின் ஆரம்ப காலத்தில் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

உந்து சக்தியாக

உந்து சக்தியாக

அவ்வாறு தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வரும் அமீர், கௌதம் வாசுதேவ் மேனன், கே.வி ஆனந்த் என தற்போது உள்ள மிகப்பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்து அவர்களின் திரைத்துறை வாழ்க்கைக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்துள்ளார்.

சில்லுனு ஒரு காதல்

சில்லுனு ஒரு காதல்

அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு புதுமுக இயக்குனராக அறிமுகமான கிருஷ்ணா இயக்கிய "சில்லுனு ஒரு காதல்" திரைப்படத்தில் சூர்யா ஒரு ஆணின் வாழ்வில் இருக்கும் இரண்டு வேறு காதல் களங்களை மையமாகக் கொண்டு உருவான படத்தில் நடிகை ஜோதிகா மற்றும் பூமிகா உடன் இணைந்து நடித்திருப்பார்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இன்று வரை பலரது விருப்பப்படமாக இருந்து வருகிறது. இதில் சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா உடன் இணைந்து ஸ்ரியா ஷர்மா குழந்தை நட்சத்திரமாக சுட்டித் தனமாக நடித்து அனைவரையும் கவர்ந்து இருப்பார்.

குட்டி பாப்பாவாக

குட்டி பாப்பாவாக

தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த ஸ்ரியா ஷர்மா முதன்முதலில் "சில்லுனு ஒரு காதல்" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் இவர் தோன்றியிருந்தாலும் ரசிகர்களுக்கு இவர் சில்லுனு ஒரு காதல் குட்டி பாப்பாவாகவே இன்றும் பலரது மனங்களில் நிறைந்து இருக்கிறார்.

நம்ம ஐஷு பாப்பாவா!!

நம்ம ஐஷு பாப்பாவா!!

அவ்வாறு சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் குட்டி பாப்பாவாக நாம் பார்த்து ரசித்த ஸ்ரியா ஷர்மா தற்பொழுது மளமளவென வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகிவிட்டார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த பலரும் நம்ம ஐஷு பாப்பாவா இது !! என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆச்சரியப்படுத்தி

ஆச்சரியப்படுத்தி

தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றி வரும் ஸ்ரியா ஷர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தமிழில் ஹீரோயினாக

தமிழில் ஹீரோயினாக

ஐஷு பாப்பாவாக பார்த்த நம்ம ஸ்ரியா தற்போது குட்டை பாவாடையில் கிறங்க வைக்கும் அழகில் செம்ம க்யூட்டாக வெட்கப்பட்டுக்கொண்டே இருக்கும் அந்த புகைப்படங்கள் இப்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவரும் ஸ்ரியா தமிழில் ஹீரோயினாக பார்க்க பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X