கணவரை கொலை செய்துவிட்டு 8 மாதமாக தலைமறைவாக இருந்த நடிகை ஸ்ருதி கைது
பெங்களூர்: கணவரை கொலை செய்துவிட்டு 8 மாதமாக தலைமறைவாக இருந்த நடிகை ஸ்ருதி சந்திரலேகா பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
தமிழ், கன்னட படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி சந்திரலேகா(22). அவரது கணவர் ரொனால்டு பீட்டர் பிரின்ஸோ(35). திருமணத்தின்போது பிரின்ஸோ உமாசந்திரன், பிரின்சன் ஆகியோருடன் சேர்ந்து நெல்லையில் பலசரக்கு கடை வைத்துள்ளார். ஆனால் கடை நஷ்டத்தில் போனதும் அவர் பெங்களூருக்கு சென்றுவிட்டார். தங்களின் முதலீட்டு பங்கு பணத்தை உமாசந்திரன், பிரின்சன் கேட்டதற்கு அதை கொடுக்காமல் சென்றுவிட்டார் பிரின்ஸோ.

நிதி நெருக்கடியால் ஆபாச படம் எடுத்து சம்பாதிக்க முடிவு செய்தார் பிரின்ஸோ. தனது மனைவியை ஆபாச படங்கள் மற்றும் கூட்டாக நடக்கும் செக்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மதுரவாயலுக்கு வந்தபோது ஸ்ருதி தனது கணவரை தீர்த்துக்கட்ட பிரின்சன் மற்றும் உமாசந்திரனுடன் சேர்ந்து திட்டமிட்டார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி பிரின்ஸோவுக்கு விஷம் கலந்த பாலை ஸ்ருதி கொடுத்தார். பிரின்ஸோ மயங்கியதும் அவரை உமாசந்திரனும், பிரின்சனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
அதன்பிறகு காந்திமதிநாதன், விஜய், வினோத் நிர்மல், எலிசா மற்றும் ரபீக் ஆகியோரின் உதவியோடு உடலை காரில் ஏற்றிச் சென்று பாளையம்கோட்டையில் புதைத்துவிட்டனர். இதன் பிறகு ஸ்ருதி தனது கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்துவிட்டு வீட்டில் இருந்த ரூ.75 லட்சத்துடன் தலைமறைவானார். அதே சமயம் பிரின்ஸோவின் சகோதரர் ஜஸ்டினும் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
விசாரணையில் பிரின்ஸோ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஸ்ருதி பெங்களூரில் உள்ள பைனான்சியர் ஒருவர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications











