அப்படி செய்வது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.. எந்த வெட்கமும் இல்லை..ஓபனாக பேசிய ஸ்ருதி ஹாசன்

சென்னை: கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துவரும் அவர் சாந்தனு என்பவரை காதலித்தார். ஆனால் அந்தக் காதல் பிரேக்கப்பில் முடிந்தது. அதனையடுத்து ஸ்ருதி கொடுத்த ஒரு பேட்டியில், ஒருவரை காதலிக்க பிடிக்கும். ஆனால் திருமணம் பற்றி யோசிக்கமாட்டேன் என்று ஓபனாக கூறியிருந்தார். இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் பேசியிருக்கும் விஷயம் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர் கமல் ஹாசன். திரையுலகில் பல திறமைகளை கொண்ட அவருக்கு ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன் என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். வாணி கணபதியை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ரேகாவை காதலித்து திருமணம் செய்தார் கமல். அந்தத் தம்பதிக்கு ஸ்ருதியும், அக்‌ஷராவும் பிறந்தார்கள். ஸ்ருதிஹாசன் அடிப்படையில் ஒரு இசைக்கலைஞர். பாடல்கள் பாடுவது, இசையமைப்பது போன்றவற்றில் ஆர்வம் உடையவர்.கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு ஸ்ருதிதான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ருதி ஹாசன்: இசை கலைஞராக இருந்த அவர் சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஸ்ருதி ஹாசனுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் 3 உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து அசத்தினார். தமிழில் எப்படி அவர் தனது திறமையை அசால்ட்டாக நிரூபித்தாரோ அதேபோல் மற்ற மொழிகளிலும் நிரூபித்து புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று காட்டினார்.

அடுத்த படங்கள்: அவர் கடைசியாக தெலுங்கில் சலார் 2 படத்தில் நடித்தார். அந்தப் படத்தை கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. ஸ்ருதிக்கும் பெரிய பெயர் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்ததாக சலார் 2, கூலி, ட்ரெய்ன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவற்றில் கூலி படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிப்பதால் இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

Actress Shruthi Haasan Open Talks about Plastic Surgery

ஸ்ருதியின் காதல்: முதலில் நடிகர் சித்தார்த்டை இவர் காதலிப்பதாகவும் இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்ததாகவும் கிசிகிசுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இதில் எல்லாம் எவ்வளவு என்று தெரியவில்லை. அதேசமயம் இவர் சாந்தனு என்பவரை தீவிரமாக காதலித்துவந்தார். தனது தந்தையிடமும் அறிமுகம் செய்துவைத்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்தக் காதல் பாதியில் பிரேக்கப் ஆனது. அதற்கு பிறகு திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Take a Poll

ஸ்ருதி ஹாசனின் அறுவை சிகிச்சை: சூழல் இப்படி இருக்க அவர் தனது மூக்கில் ரைனோ பிளாஸ்டி எனப்படும் அறுவை சிகிச்சையை செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து மூக்கினை அழகுப்படுத்தவே அந்த அறுவை சிகிச்சையை அவர் செய்துகொண்டார் என்று பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் அதுகுறித்து அவர் பேசுகையில், "எனது மூக்கு எலும்பில் சிறிய மாறுதல் ஒன்று இருந்தது. அதன் காரணமாகத்தான் இந்த அறுவை சிகிச்சையை நான் செய்துகொண்டேன். அழகுக்காக செய்துகொள்ளவில்லை.

என் விருப்பம்: அப்படியே அழகுக்காக நான் அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் அதை வெளிப்படையாஅக் சொல்லியிருப்பேன். ஒரு பெண் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பம். அதில் வெட்கப்படவோ, பிறரிடம் நியப்படுத்தவோ செய்யக்கூடிய விஷயம் இல்லை. இது என்னுடைய ஆழ்க்கை. என்னுடைய முகம். ஆம் நான் அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன்தான். அதில் எனக்கு எந்த விதமான வெட்கமும் இல்லை" என்றார்.

ஸ்ருதி ஹாசனின் ஓபன் டாக்: பொதுவாக ஸ்ருதி ஹாசன் தனது மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடக்கூடியவர்.தனது தந்தை கமலும், தாய் சரிகாவும் பிரிந்தது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், "நான் மிகவும் அழகான குடும்பத்தில்தான் பிறந்தேன். கலை உணர்வு மிகுந்த புத்திசாலித்தனமான பெற்றோர்கள் எனக்கு கிடைத்தார்கள். கடவுளின் அருளால் நிறைய வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அதனுடைய மறுபக்கத்தையும் நான் பார்த்திருக்கிறேன். எனது பெற்றோர் பிரிந்தபோது எல்லாமே மாறிவிட்டது என்பதுதான் உண்மை.

நிதி சுதந்திரம்: அந்த சமயத்தில்தான் நிதி சுதந்திரம் உள்ளிட்டவற்றின் மதிப்பை என்னால் உணர முடிந்தது. குறிப்பாக ஒரு மகளாக இருந்து அம்மா தன்னுடைய திருமண உறவிலிருந்து வெளியேறியதை பார்த்து ஒரு பெண் சுதந்திரமாக இருப்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் நன்றாகவே புரிந்துகொண்டேன். அதேசமயம் பெற்றோர் பிரிந்தது எனக்கு வலியையும் கொடுத்தது. குழந்தைகள் மட்டுமில்லை அவர்களும் இதனை உணரத்தான் செய்கிறார்கள்.

சாதாரண விஷயம்: இந்த விஷயம் இப்போது எல்லோரின் வீடுகளிலும் சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால் இன்றும் சமூகத்துக்காகவும், தங்களது பிள்ளைகளுக்காகவும் பெற்றோர்கள் ஒரே வீட்டில் இருக்கும் நிலைமையும் இருக்கின்றன. சில நேரங்களில் அந்த வீடுகளில் நிறைய வலி இருக்கிறது" என கூறியிருந்தார்.

அதேபோல் இன்னொரு பேட்டியில், 'எனக்கு ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பிடிக்கும். காதலிக்க பிடிக்கும். ஆனால் திருமணம் செய்துகொள்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது'என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் அவரிடம், உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஸ்ருதியோ, 'ஏன் நீங்கள்தான் மண்டபம் பிடித்து என்னுடைய திருமணத்துக்கு கரண்ட் பில் கட்டப்போகிறீர்கள்' என்று ஒரே போடாக பேட்டார்.

அதுமட்டுமின்றி அவரது தந்தையான கமல் ஹாசன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அதுகுறித்து ஸ்ருதி ஹாசன் ஒரு பேட்டியில், " எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஆனால் எனது அப்பாவுக்கோ கடவுள் மேல் நம்பிக்கை இல்லாததன் காரணமாக எங்களால் கோயிலுக்கு செல்ல முடியாமல் இருந்தது. அதனால் திருட்டுத்தனமாக அப்பாவுக்கு தெரியாமல் கோயிலுக்கு செல்வேன். அடிக்கடி தேவாலயத்துக்கும் செல்வேன். ரொம்ப நாட்களுக்கு நான் இப்படி செய்வது அப்பாவுக்கு தெரியாது. தாத்தாவுடன் சென்றாலும் அப்பாவிடம் சொல்லக்கூடாது என்று சொல்லிவிடுவேன்.

கடவுள் நம்பிக்கைதான்: நான் இன்று தைரியமாகவும், இந்த நிலைமையில் இருப்பதற்கும் காரணம் கடவுள் மேல் இருக்கும் நம்பிக்கைதான். ஆனால் அது அப்பாவுக்கு பிடிக்காது. அம்மாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் இருந்தார். நான் வளரும்போது கடவுளின் சக்தியை நானே கண்டுபிடித்து பிறகு புரிந்துகொண்டேன்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பல விஷயங்களை ஓபனாக பேசுவதன் காரணமாகவே அவரை ரசிகர்களில் ஒருதரப்பினர் ரசிக்கிறார்கள் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

FAQs
நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையின் பெயர் என்ன?

அக்‌ஷரா ஹாசன்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X