நீங்கள் எந்த மது உபயோகிப்பீர்கள் - ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதி ஹாசனின் பதில்

சென்னை: நீங்கள் எந்த மது பயன்படுத்துவீர்கள் என ரசிகர் கேட்ட கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதிலளித்திருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்தவர். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சர்வதேச தரத்திலான குரல் வளம் உடையவர் என பலரால் பாராட்டப்பட்டவர் ஸ்ருதிஹாசன்.

நடிகையாக அறிமுகமான ஸ்ருதிஹாசன்

நடிகையாக அறிமுகமான ஸ்ருதிஹாசன்

பாடல் பாடுவதில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆராய்ச்சி மாணவராக அந்தப் படத்தில் நடித்திருந்த ஸ்ருதிஹாசன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ஒரு மீட்டிங் சீனில் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்திய நடிப்பும், டயலாக் டெலிவரியும் அவருக்கு புகழை ஏற்படுத்திக்கொடுத்தன.

தனுஷுடன் இணைந்து நடித்த ஸ்ருதி ஹாசன்

தனுஷுடன் இணைந்து நடித்த ஸ்ருதி ஹாசன்

ஏழாம் அறிவு பெற்றுக்கொடுத்த வரவேற்பை அடுத்து தமிழில் 3 படத்தில் நடிக்க கமிட்டானார் ஸ்ருதிஹாசன். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அந்தப் படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, தனுஷின் மனைவி மூன்று காலகட்டத்திற்கான பக்குவத்தையும், உடல்மொழியையும் ஸ்ருதிஹாசன் தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன்.

ஸ்ருதிஹாசன் கடைசியாக நடித்த படம்

ஸ்ருதிஹாசன் கடைசியாக நடித்த படம்

தமிழில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். அந்தவகையில் கடைசியாக அவர் 'வால்டர் வீரய்யா', 'வீரசிம்ஹா ரெட்டி' படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதுமட்டுமின்றி, கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்கிவருகிறார் இந்தப் படத்திலும் ஸ்ருதி ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் தன்னுடைய போர்ஷனை சமீபத்தில் நிறைவு செய்தார் அவர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ருதிஹாசன்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ருதிஹாசன்

ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். அந்தவகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் அவர். அப்போது ரசிகர் ஒருவர்,'மதுவகைகளில் உங்களுக்கு விருப்பமானது எது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஸ்ருதி, "நான் தற்போது மது இல்லாத வாழ்க்கை முறையில் இருக்கிறேன். கடந்த ஆறு வருடங்களாக நான் அதை கடைப்பிடித்துவருகிறேன். ஆனாலும் சில நேரங்களில் ஆல்கஹால் இல்லாத பீர் வகைகளை அருந்துவேன்" என குறிப்பிட்டார்.

ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி ஹாசன்

ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசனிடம் மற்றொரு ரசிகர், நீங்கள் வெர்ஜினா என ஆங்கிலத்தில் எழுத்து பிழையுடன் கேட்டிருந்தார். அதற்கு அசராமல் பதிலளித்த ஸ்ருதி ஹாசன், "முதலில் வெர்ஜின் என்பதற்கு சரியான ஸ்பெல்லிங்கை தெரிந்துகொள்ளுங்கள்" என குறிப்பிட்டிருந்தார். ஸ்ருதி ஹாசனின் இந்த பதில் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X