ரொம்ப நாளைக்கு அப்புறம் இத நான் போடுறேன்... நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட குஷி புகைப்படம்!
சென்னை : தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகையாக முன்னணி வகித்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
தமிழை விடவும் தெலுங்கில் அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் இவர் நடிக்கும் அனைத்து தெலுங்கு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.
ஸ்ருதிஹாசன் கடைசியாக தமிழில் நடித்த லாபம் திரைப்படம் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில் இப்பொழுது நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய குட்டி பிளாக் டிரஸ்ஸை போட்டுக்கொண்டு போஸ் கொடுத்து பதிவிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக
பாடகி , நடனம், நடிப்பு என அனைத்திலும் கை தேர்ந்தவராக ஸ்ருதிஹாசன் இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கக் கூடிய மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ளார். குறிப்பாக தென்னிந்தியாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். தமிழ் சினிமாவிற்கு ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து 3, பூஜை, புலி,வேதாளம், சிங்கம்-3 என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

போட்டி போட்டு நடிக்க வைக்கின்றனர்
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட அதில் மனதை கொள்ளைகொள்ளும் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து தெலுங்கு ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார். தமிழ் நடிகையாக இருந்தாலும் தெலுங்கில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதால் இவரை தெலுங்கு பட இயக்குனர்கள் தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டு நடிக்க வைக்கின்றனர்.

பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில்
தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியான க்ராக் மிகப்பெரிய வெற்றிபெற்ற சூழலில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சலார் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்திய அளவில் பாக்ஸ் ஆபீஸ் அசைத்துப் பார்த்த பாகுபலி மற்றும் கே ஜி எஃப் பட பிரபலங்கள் ஒன்றாக இதில் இணைந்துள்ளனர். பக்கா ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
Recommended Video

ரொம்ப நாளைக்கு அப்புறம் இத போடுறேன்
அடிக்கடி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வரும் ஸ்ருதிஹாசன் இப்பொழுது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தான் வைத்திருக்கும் குட்டி பிளாக் டிரஸ் ஒன்றை போட்டுக்கொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











