நடிகை சுருதிஹாசன் மருத்துவமனையில் அனுமதி
ஹைதராபாத்: வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நடிகை சுருதிஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சுருதிஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்தார். சமீபத்தில் மும்பையில் இவர் மீது தாக்குதல் நடந்தது. வீட்டுக்குள் மர்ம மனிதர் அத்துமீறி நுழைந்து சுருதிஹாசனை தாக்கினார். பின்னர் அவனை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர்.

சுருதிஹாசன் தற்போது ஹைதராபாத்தில் தங்கி இருந்து ரேஸ்குராம் என்ற படத்தில் நடித்து வந்தார். இவர் தெலுங்கில் நடித்துள்ள இன்னொரு படமான ஏவடு ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் புரோமோசன் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
தெலுங்கு படப்பிடிப்பில் இருந்தபோது சுருதிஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை ஹைதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications











