ஒரு வருடம் டைம் எடுத்து அதை ஆராய்ந்த ஸ்ருதி ஹாசன்!

ஒரு ஆண்டு காலம் அவகாசம் எடுத்துக்கொண்டு தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைச் சோதித்து பார்த்துள்ளாராம் ஸ்ருதிஹாசன்.

By Rajeswari

சென்னை: ஒரு ஆண்டு காலம் அவகாசம் எடுத்துக் கொண்டு தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைச் சோதித்து பார்த்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழில் முதல் முதலாக ஏழாம் அறிவு மூலம் அடியெடுத்து வைத்தார். இவர் திரையுலகிற்கு வந்தவுடனே இவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்தனர்.

Actress shruthi hassan tested herself what is her strength and weakness

மேலும் இவர் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய எல்லா மொழிகளிலும் வரிசையாகப் படங்கள் நடித்து பெரும் புகழைப் பெற்றார், மேலும் எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.

ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக இவரை எந்தத் திரைப்படத்திலும் காண முடியவில்லை, ஏன் இந்த இடைவெளி? இவர் திருமணம் பண்ணும் முடிவு எதாவது எடுத்திருக்கிறாரா என்று பல வதந்திகள் வரத் தொடங்கின, இந்நிலையில் ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஸ்ருதிஹாசன்.

அப்போது தனக்கு தன்னை பற்றி சுயமாகப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது, என்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவே நான் இந்த இடைவெளியை எடுத்துக்கொண்டேன். தற்போது தனக்கு தன்னை பற்றி ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. இனி வரும் காலங்களில் தன் படங்களை பார்க்க முடியும் என்று கூறினார்.

அது மட்டும் அல்ல தன் தாய் சரிகாவுடன் இணைந்து மிக விரைவில் ஒரு படம் பண்ணப் போவதாகவும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X