என்னது ஸ்ருதிகாவுக்கு நடந்தது குழந்தை திருமணமா?... அவங்க என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
சென்னை : சூர்யாவுடன் ஸ்ரீ படத்தில் நடித்த நடிகை ஸ்ருத்திகா தொடர்ந்து ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனார். தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தற்போது இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நடிகை ஸ்ருதிகா
நடிகை ஸ்ருதிகா பழம்பெரும் நடிகர் மறைந்த தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி. இவர் பள்ளி படிக்கும் காலத்திலேயே நடிக்கத் துவங்கினார். சூர்யாவுடன் ஸ்ரீ, ஆல்பம் போன்ற படங்களில் நடித்த இவர் தொடர்ந்து மீண்டும் படிக்க சென்றுவிட்டார். அதுடன் நடிக்க மீண்டும் வராத இவர் திருமணம் முடித்து செட்டில் ஆகிவிட்டார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி
இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் சின்னத்திரை மூலம் தனது என்ட்ரியை மீண்டும் கொடுத்துள்ளார். 10 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை மனோபாலா, ராகுல் தாத்தா, அந்தோணி தாஸ், சந்தோஷ் உள்ளிட்டவர்கள் எலிமினேட் ஆகியுள்ளனர்.

களத்தில் இறங்கிய ஸ்ருதிகா
தற்போது போட்டியில் ரோஷினி, வித்யுலேகா, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ஸ்ருதிகா அர்ஜூன், அம்மு அபிராமி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் மட்டுமில்லாமல், குக்குகள் மற்றும் நடுவர்களும் காமெடி களத்தில் இறங்கியுள்ளதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது.

குழந்தை திருமணம்
பள்ளிப் பருவத்திலேயே நடிக்க வந்த ஸ்ருதிகாவிற்கு 23 வயதிலேயே திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீடியோ ஒன்றில் பேசியுள்ள ஸ்ருதிகா அர்ஜூன், இந்த ஜெனரேஷன் பெண்களுக்கு தன்னுடைய திருமணம் குழந்தை திருமணமாகவே தெரியும். ஆனால் தனக்கு அப்படியில்லை என்றும் தான் சிறந்த மனைவியாக, தாயாக, பெண் தொழிலதிபராக கலக்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் பதிவுகள்
இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோக்கள், புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகின்றன. இவரது பழைய பேட்டிகள் உள்ளிட்டவை இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. குக் வித் கோமாளி நிகழ்ச்சிமூலம் இவர் தற்போது ஏராளமான ரசிகர்களை பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications











