இப்ப சூட்சமம் தெரிஞ்சிடுச்சு.. ஆனா.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகா ஓபன்!

சென்னை: நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்ற அடையாளத்துடன்தான் கடந்த 2002ம் ஆண்டில் ஸ்ரீ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ருதிகா. முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் இந்தப் படம் ஸ்ருதிகாவிற்கு கைக்கொடுக்கவில்லை.

தொடர்ந்து 4 படங்களில் நடித்த ஸ்ருதிகா, படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். அர்ஜுன் என்பவரை தன்னுடைய 22வது வயதில் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன இவர் பிசினஸ் வுமனாகவும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்று டைட்டிலை வெற்றி கொண்டார்.

shruthika cwc show tamil cinema

நடிகை ஸ்ருதிகா: நடிகை ஸ்ருதிகா பிரபல நடிகர் மறைந்த தேங்காய் ஸ்ரீநிவாசனின் பேத்தி என்ற அடையாளத்துடன்தான் தமிழில் நடிக்க வந்தார். முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஸ்ரீ என்ற படத்தில் நடித்திருந்தார். சூர்யா -ஸ்ருதிகா காம்பினேஷன் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் இந்தப் படம் கவரவில்லை. தொடர்ந்து ஆல்பம், நளதமயந்தி, தித்திக்குதே போன்ற படங்களில் நடித்திருந்த இவர், பட வாய்ப்புகள் சரியாக அமையாத நிலையில், ஒரு கட்டத்தில் மீண்டும் படிப்பை தொடரவுள்ளதாக கூறி சினிமாவில் இருந்து விலகினார். தொடர்ந்து ஃபேஸ்புக் மூலமாக அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

அப்பா -அம்மாவிற்கு பிடிக்கவில்லை: பிசினஸ் வுமனாகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், பல ஆண்டுகளுக்கு பிறகு குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய உடை, பேச்சு மற்றும் சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தார். சிறப்பாக சமைத்து டைட்டிலையும் வெற்றி கொண்டார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். புதிதாக புடவை டிசைன் செய்யும் தொழிலையும் துவங்கி சக்சஸ்ஃபுல்லாக நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் நடித்தது தன்னுடைய அப்பா -அம்மாவிற்கு பிடிக்கவில்லை என்று தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். ஆயினும் தன்னுடைய விருப்பத்திற்காக ஓகே சொன்ன அவர்கள், தான் தொடர்ந்து நடிக்காததால் சந்தோஷமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சூட்சமம் தெரிந்துவிட்டது: 4 படங்களில் நடித்தும் தனக்கு வெற்றி கிடைக்கவில்லை என்று கூறியுள்ள ஸ்ருதிகா, 14 -15 வயதில் நடிக்கவந்த தனக்கு நடிப்பில் உள்ள சூட்சமங்கள் மற்றும் தன்னை வெளிப்படுத்தும் வித்தை ஆகியவை தெரியவில்லை என்றும் ஆனால் தற்போது தான் அதை கற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த தோல்விதான் அடுத்தடுத்த வெற்றிகளை தனக்கு கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னால் முடியாது என்று யாராவது கூறிவிட்டால், அதையே தான் மனதில் ஏற்றிக் கொண்டு வெறித்தனமாக அதை சாதித்து காட்டுவேன் என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் டைட்டிலை வெற்றி கொள்வதற்கும் அதுதான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அம்மா பெஸ்ட்: தற்போது தன்னுடைய கணவர் மற்றும் மகன் தன்னுடைய கேரியரில் மிகவும் சப்போர்ட்டாக இருப்பதாகவும் ஆனால் தான் சினிமாவில் நடிக்க வந்தபோது தன்னுடைய அப்பா -அம்மாவிற்கு தான் நடிப்பதில விருப்பம் இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தன்னுடைய அம்மா உண்மையிலேயே ஹிட்லராகவே செயல்பட்டார் என்றும் தன்னை அடித்து வளர்த்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தன்னுடைய நலனில் அதிகமான அக்கறை எடுத்துக் கொள்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு கல்யாணம் நடக்கும்வரையில் தினந்தோறும் டைம்டேபிள் போட்டு தனக்கு ஜூஸ் உள்ளிட்டவற்றை செய்துக் கொடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X