இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் 15 மில்லியன்.. க்யூட்டான ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறிய ஸ்ருதி!

சென்னை : நடிகர் நடிகைகள் திரைப்படங்களில் வெற்றிகரமாக வலம் வருவதற்கு முக்கியமான காரணம் அவர்களது ரசிகர்கள் கூட்டம்.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு தங்களது ரசிகர் கூட்டத்தை குறையாமல் பார்த்துக்கொள்கின்றனர் நடிகைகள்.

இந்தவகையில் இப்பொழுது நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 15 மில்லியனை கடந்ததை கொண்டாடி ஜாலியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழில் கதாநாயகி

தமிழில் கதாநாயகி

பாடகியாக தனது வாழ்க்கையை தொடங்கிய ஸ்ருதிஹாசன் இந்தித் திரைப்படங்களில் அறிமுகமானதைத் தொடர்ந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

படங்களில் பாடல்களை

படங்களில் பாடல்களை

அதைத்தொடர்ந்து தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ஸ்ருதிஹாசன் பல படங்களில் பாடல்களையும் பாடி அசத்துவதிலும் வல்லவர். இவர் அவ்வப்போது , பல பாடங்களை வித்தியாசமாக பாடி ட்ரண்டாக்கி உள்ளார்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

நடிகையாகவும் பாடகியாகவும் சிறந்து விளங்கி வரும் ஸ்ருதி ஹாசன் தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். பல மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளதால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏகத்திற்கும் எகுறி உள்ளது.

படுக்கையறை காட்சிகள்

படுக்கையறை காட்சிகள்

துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த நடிகர் வித்யுத்துடன் சமீபத்தில் இவர் நடித்த இந்தி திரைப்படம் வெளியாகி பலரையும் வாய் பிளக்க வைத்தது. அதில் வித்யுத்துடன் பல நெருக்கமான காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என பார்க்கும் அனைவரையும் திக்கு முக்காட வைத்தது.

ரசிகர்கள் கூட்டம்

ரசிகர்கள் கூட்டம்

தமிழில் இப்போது நடித்து வரும் "லாபம்" திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து முதல்முறையாக நடித்து வரும் ஸ்ருதிஹாசனுக்கு ரசிகர்கள் கூட்டம் உலக அளவில் பல மில்லியன்களை தாண்டி உள்ளது.

ரசிகர்கள் தீர்மானிக்கின்றனர்

ரசிகர்கள் தீர்மானிக்கின்றனர்

திரைப்படங்களில் ஒரு நடிகை வெற்றிகரமாக வலம் வர அவர்களுக்கு உதவியாக இருப்பது ரசிகர்கள் கூட்டம் மட்டுமே. அவ்வாறு இருக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டமே அவர்களது வெற்றியை பெரும்பான்மையான சமயங்களில் தீர்மானிக்கின்றனர்.

15 மில்லியன் எட்டியுள்ளது

15 மில்லியன் எட்டியுள்ளது

இந்த வகையில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை போட்டு ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடரும் பாலோவர்ஸ்களின் எண்ணிக்கை 15 மில்லியனை எட்டியுள்ளது.

நன்றியை தெரிவித்துள்ளார்

நன்றியை தெரிவித்துள்ளார்

இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 15 மில்லியனை தொட்டு உள்ள நிலையில் ஸ்ருதிஹாசன் அதை ஆடிப்பாடி கொண்டாடி, கையில் 15 நம்பர் போட்ட பெயர் பலகையுடன் சேலையில் அம்சமாக ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கும் க்யூட்டான வீடியோவை வெளியிட்டு தன்னைப் பின்தொடரும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X