சினிமாவில் நான் சந்தித்த எல்லோருமே நல்லவர்கள்: ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்
சென்னை: சினிமாவில் தான் சந்தித்த அனைவருமே நல்லவர்கள் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும், அதைத்தாண்டி நடிப்பு, நடனம், இசை என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு சினிமாவுக்கு வந்த திறமைசாலி.

இவர் இப்போது மகேஷ் மஞ்ச்ரேக்கரின் இந்தி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ருதிஹாசன், சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் அனைத்தையும் அவரே விருப்பப்பட்டு தேர்வு செய்ததாகவும், அதுபோலவே எதிர்காலத்திலும் பிடித்த கதையை தேர்வு செய்து நடிப்பேன் எனவும் கூறினார்.
மதநம்பிக்கை குறித்து அவருக்கும் கமல்ஹாசனுக்கும் வேறுபாடு உள்ளது எனக் கூறிய ஸ்ருதிஹாசன், ஆன்மிக சக்தி என்று ஒன்று இருப்பதாக நம்புகிறேன். ஆனால் அது கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் இருக்கிறதா எனக் கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளாக திரையுலகில் அவர் சந்தித்த அனைவருமே நல்லவர்கள் எனவும், சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.சினிமாவில் பெண்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள் என ஸ்ரீரெட்டி புகாரளித்து வரும் நிலையில் ஸ்ருதிஹாசன் இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











