விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்!
சென்னை: நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசனும் மகேஷ் பாபுவின் சாவாலை ஏற்றுள்ளார்.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை முன்னிட்டு வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார்.
அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்த மகேஷ் பாபு, இதை விட சிறப்பாக பிறந்தநாளை கொண்டாட முடியாது என்றார்.

எதிர்பார்ப்பு
மேலும் நடிகர்கள் விஜய், ஜூனியர் என்டிஆர் மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் ஆகியோருக்கும் #GreenIndiaChallenge என சவால் விடுத்திருந்தார். இதனால் மகேஷ் பாபுவின் சவாலை இந்த பிரபலங்கள் ஏற்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

மரக்கன்றை நட்ட விஜய்
இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் மரக்கன்றை நட்டார். அந்த போட்டோக்களை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட விஜய், மகேஷ் பாபு காரு இது உங்களுக்காக என சவாலை ஏற்றுக் கொண்டதையும் தெரியப்படுத்தினார்.

சவாலை ஏற்ற ஸ்ருதி
அதற்கு மகேஷ் பாபுவும் நன்றி தெரிவித்திருந்தார். விஜய் மரக்கன்று நட்டதை தொடர்ந்து அவரது ரசிகர்களும் அதனை தொடர ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் நடிகர் விஜயை தொடர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசனும் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்றுள்ளார்.

ஸ்ருதி நன்றி
ஸ்ருதி ஹாசன் தனது வீட்டு தோட்டத்தில் மரக்கன்றுகளை நடும் போட்டோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் தன்னை க்ரீன் இந்தியா சேலஞ்சுக்காக நாமினேட் செய்தற்கு மகேஷ் பாபுவுக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பாராட்டிய மகேஷ் பாபு
அதோடு பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரையும் க்ரீன் இந்தியா சேலஞ்சுக்காக நாமினேட் செய்துள்ளார். இதனை பார்த்த நடிகர் மகேஷ் பாபு, ஸ்ருதி ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











