இன்ஸ்டாவில் காதலரின் போட்டோக்களை டெலிட் செய்த ஸ்ருதிஹாசன்.. சாந்தனுவை பிரிந்தாரா?

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனுவுடனான தனது காதல் வாழ்க்கையின் அழகான தருணங்களை போட்டோக்களாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்த நிலையில், திடீரென காதலருடன் இருக்கும் போட்டோக்களை டெலிட் செய்துள்ளார்.

.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹிரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததை அடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஷால், தனுஷ் போன்றோர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார்.

Actress shruti haasan and Santanu Hazarika breakup

நடிகை ஸ்ருதிஹாசன்: இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கணிசமான படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழில் அவருக்கு வாய்ப்பு குறைந்ததை அடுத்து, தெலுங்கு பக்கம் சென்று அங்கு கணிசமான படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் கடைசியாக அவர் வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி போன்ற படத்தில் நடித்தார். ஹாய் நன்னாவில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான சலார் படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்து கம்பேக் கொடுத்தார்.

காதலருடன் மும்பையில்: ஸ்ருதி ஹாசனின் தந்தை சினிமா, அரசியல் என பிஸியாக இருக்கும் போது, இவர் தனது காதலர் சாந்தனுவுடன் மும்பையில் செட்டிலாகி விட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் இருவர் குறித்தும் அடிக்கடி கிசுகிசு சோஷியல் மீடியாவில் வந்து கொண்டு தான் இருக்கிறது.

பிரிந்தாரா: இந்நிலையில்,ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராமில் தனது காதலனுடன் எடுத்த அனைத்துப்போட்டோக்களையும் டெலிட் செய்துள்ளார். மேலும், இருவரும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளார்கள். இதனால், ஸ்ருதி ஹாசன் மற்றும் சாந்தனு ஹஸாரிகா இருவரும் பிரேக்கப் செய்துவிட்டதாகவும், காதல் உறவை முறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: கடந்த ஒரு மாத காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், பொது இடத்திற்கு தனித்தனியாக வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து, அதிகாரப்பூர்வமான விளக்கத்தை ஸ்ருதி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்ஸ்லியை காதலித்து வந்த ஸ்ருதி ஹாசன், 2019 ஆம் ஆண்டு மனம் ஒத்து பிரிவதாக அறிவித்தனர். இதனால், ஸ்ருதி சில மாதங்கள் மன அழுத்தத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X