தந்தையர் தினத்தில் சர்ப்ரைஸ் நியூஸ்.. கமல்ஹாசன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் ஸ்ருதிஹாசன்?
சென்னை: தமிழ் சினிமாவில் தனது குழந்தை பருவத்தில் இருந்து நடிக்க தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக மட்டுமில்லாமல் இந்திய சினிமாவின் அடையாளமாக உலகெங்கும் ஜொலித்துக் கொண்டிருக்க கூடிய ஒரு நடிகர் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் தான். சினிமாவில் இவர் நடித்திராத பாத்திரம் பாத்திரம் இல்லை, கமல்ஹாசனுக்கு தெரியாத சினிமா தொழில்நுட்பம் இல்லை எனும் அளவிற்கு சினிமாவை கரைத்துக் குடித்தவர் என கூறலாம்.
இரட்டை வேடங்கள் கொண்ட சினிமா என்றால் மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அல்லது ஒவ்வொரு வேடத்திற்கும் வேறு வேறு மாதிரியான மேனரிசங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவுக்காக முழுக்க முழுக்க தன்னையே அர்ப்பணித்தவர் கமல்ஹாசன். இதற்கு அவரது நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம், ஆளவந்தான் என பல படங்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். நடிப்பில் கமல்ஹாசன் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார் என்றால் இயக்கம், திரைக்கதை, எழுத்து என அனைத்திலும் முத்திரை பதித்து சினிமாவின் நடமாடும் பல்கலைக் கழகமாக வலம் வருகின்றார். உலக சினிமாக்களில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள் பலவற்றை, தமிழ் சினிமாவுக்கு ஏன், இந்திய சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததில் கமல் ஹாசனின் பங்கு அளப்பரியது.

இந்தியன் 2: உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வரும் 27 ஆம் தேதி கல்கி 2898 ஏ.டி படமும் அடுத்த மாதம் 12ஆம் தேதி இந்தியன் 2 படமும் வெளியாக உள்ளது. கல்கி 2898 ஏ.டி படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கின்றார். ட்ரைலரில் அவருக்கு வைக்கப்பட்டிருந்த ஷாட்டும் மேக்கப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகமும் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தந்தையர் தின கொண்டாட்டம்: கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே நடிகைகளாக உள்ளனர். இந்நிலையில் இன்று அதாவது ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இந்தியா உட்பட 52 நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஸ்ருதிஹாசன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி சினிமா வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

கமல் பயோ-பிக்: அந்த பேட்டியில் ஸ்ருதிஹாசன் தனது அப்பா கமல்ஹாசனிடம் இருந்து பெற்ற உந்துதல் தனக்குள் ஒரு இயக்குனராக வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். உடனே ஸ்ருதிஹாசனிடம் நீங்கள் இயக்குநரானால் உங்கள் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பீர்களா என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு ஸ்ருதிஹாசன் நான் ஒருபோதும் எனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க மாட்டேன். நான் அவ்வாறு எனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் அது அந்த திரைப்படத்திற்கு நியாயம் கற்பிக்கும் விதமாக இருக்காது. நான் ஒருதலைப்பட்சமாக படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அவரது வாழ்க்கைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கு இங்கு அதிகப்படியான இயக்குநர்கள் இருக்கிறார்கள் என கூறியுள்ளார். தந்தையர் தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன் பேசிய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஸ்ருதிஹாசன் நடிப்பில் அண்மையில் சலார் படத்தின் முதல் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











