உங்களுக்கு எப்போ கல்யாணம்? சட்டென மாறிய ஸ்ருதிஹாசன் முகம்.. என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: கமல் ஹாசனின் மகள் ஸ்ருதியுடன் சேர்ந்து இனிமேல் எனும் இசை வீடியோவில் இ யக்குநர் லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் ரொமான்ஸ் செய்திருந்தார். இந்த ஆல்பம் பாடல் நேற்று வெளியாகி வைரலாகி வரும் நிலையில், செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு எப்போ கல்யாணம்? என கேட்டகேள்வியால் ஸ்ருதிஹாசனின் முகம் சட்டென்று மாறியது.
கமல்ஹாசன் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் பாடல் இனிமேல். இதில் ஸ்ருதி ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் செம ரொமான்ஸ் செய்துள்ளார். இணையத்தின் இதன் ப்ரோமோ வெளியான போது, லோகேஷின் தீவிர ரசிகர்கள் வாயடைத்துப்போய், இது நம்ம இயக்குநர் லோகேசா என நினைக்க வைத்துவிட்டார். அதற்கு காரணம் அந்த ப்ரோமோவில் இருந்த அந்த ரொமான்ஸ் காட்சிதான்.

கிண்டலடித்த பேன்ஸ்: வழக்கமாக லோகேஷ் கனகராஜின் படத்தில் ஹீரோயினே இருக்க மாட்டாங்க, அப்படியே இருந்தாலும் ஒப்புக்கு ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆட்டம் போட்டுவிட்டு செல்வார். அது போலத்தான் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகன் பெயரளவிற்கு வந்து போவார். அதை விட விக்ரம் படத்தில், பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்த காயத்ரி சங்கரின் தலையையே வெட்டிவிட்டார். ஆனால், லியோ படத்தில் ஒரே ஒரு முத்தக்காட்சி இருக்கும் அதுவும் விஜய் கேட்டுக் கொண்டதால் வைக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது.
என்னம்மா இதெல்லாம்: ஹீரோயினை கண்டால் காத தூரம் ஓடும், லோகேஷ் கனகராஜ், ஆல்பம் பாட்டில் மட்டும் இன்று ஹீரோயினை கொஞ்சுவது நியாயமா என ரசிகர்கள் கேள்வி கேட்டு தெறிக்கவிட்டனர். அது மட்டுமில்லாமல் விக்ரம் படத்தில் நடித்த காயத்ரி உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு.. என்னம்மா இதெல்லாம்? என நகைச்சுவையாக குறிப்பிட்டு கேள்வியெழுப்பியுள்ளார். அவருக்கு ஆதரவாக இணையத்தில் பலரும், எங்க விஜய்யண்ணாவை மட்டும் உங்க படங்களில் ரொமான்ஸ் பண்ணவிடலேயே என்று லோகேஷிடம் கேட்டு வந்தனர்.
இனிமேல் ஆல்பம்: இந்நிலையில், இனிமேல் ஆல்பம் பாடலின் வீடியோ நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் காதல், கல்யாணம், பிரிவு, சண்டை என அனைத்தும் இருந்தது. காதல் செய்து விட்டால், அந்த காதலுக்காக சண்டை வந்தாலும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று அழகான பாடல் வரியுடன் கூறப்பட்டு இருந்தது. நேற்று வெளியான இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து நேற்று லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும், செய்தியாளர்களிடம் பேசினார்கள். ரொமான்ஸ் செய்ய லோகேஷ் கனகராஜை எப்படி தேர்வு செய்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதி, லோகேஷ் கனகராஜை தான் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவரை விக்ரம் பட ஷூட்டிங் நடந்தபோது செட்டில் சந்தித்தேன். சிலரை பார்த்தால் இவங்கள கேமரா முன்னாடி வச்சா நல்லா இருக்கும்னு தோன்றும், அப்படித்தான் அவரை பார்த்ததும் எனக்கு தோனுச்சி. இந்த வீடியோ ரியலாக இருக்க வேண்டும் என நினைத்தேன் அது போலவே பாடல் ரொம்ப இயல்பா வந்து இருக்கு என்றார்.
நிரூபர் கேட்ட கேள்வி: இதைத்தொடர்ந்து மற்றொரு பத்திரிக்கையாளர், பாடலின் ஆரம்பமும் முடிவும் ரொம்ப நல்லா இருக்கு, எப்போ உங்களுக்கு கல்யாணம் என்று கேட்டார். நிருபர் கேட்ட கேள்வியால், ஸ்ருதிஹாசனின் முகம் சட்டென்று மாறி, சார் சீரியசாவா கேட்குறீங்க என்று கூறிவிட்டு தெரியல சார், சத்தியமா தெரியல சார். இந்த பாடல் பற்றி ஏதாவது கேள்வி கேளுங்க என்றார். நடிகை ஸ்ருதிஹாசன் காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் மும்பையில் லிவ்விங் டூ ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











