அப்பா முகத்தில் சிரிப்பு.. பெருமையாக இருக்கு.. ஸ்ருதிஹாசன் உருக்கமான பதிவு!

சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஸ்ருதிஹாசன் தனது இசைக்குழுவுடன் கலந்து கொண்டு பாடிய நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2. கடந்த 2018ம் ஆண்டில் தொடங்கப்பட்ட, இந்த படத்தின் படப்பிடிப்பு கிரேன் விபத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் பிரச்சனை, கொரோனா போன்ற காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த பிரச்சனையில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு பிரச்சனையை முடித்து வைத்தார்.

indian 2 Shruti Haasan Kamal haasan 2

இந்தியன் 2: இதன் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் இந்தியன் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு, தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தியன் முதல் பாகத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்து இருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 12ந் தேதி வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்தின் நீளம் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளதால் இதை இரண்டு பாகமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி இந்தியன் 3 படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என நம்பப்படுகிறது.

கமல் பேச்சு: இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், பொதுவாக இரண்டாம் பாகம் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஏனென்றால் படத்தில் என்ன இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து வருவார்கள். இந்த படத்துக்கு நடுவுல எக்கச்சக்க சோதனைகள் இருந்தது. அதை எல்லாம் கடந்து இன்றைக்கு இங்க வந்து நிக்குறதுல எனக்கு மகிழ்ச்சி, இந்தியன் 2 படம் சிக்கலில் மாட்டிக்கொண்டு இரண்டு, மூன்று வருடமாக நகராமல் இருந்த போது உதயநிதி ஸ்டாலின் உதவியதால் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த உதயநிதிக்கு மக்கள் வேறு பொறுப்பு கொடுத்திக்கிறார்கள். அந்த பொறுப்பில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.

உருக்கமான பதிவு: இதையடுத்து இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், தனத இசைக்குழுவுடன் சேர்ந்து கொண்டு சில பாடல்களை பாடினார். அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்ருதி ஹாசன் என் அப்பாவுக்கு பெருமை சேர்க்கும்படி நான் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா மேடையில் பாடியிருப்பது மகிழ்ச்சியான விஷயம். நான் பாடும்போது, அவர் சிரிப்பதைப் பார்ப்பதற்கே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில், அவரால்தான் இன்று இசைத்துறையில் இருக்கிறேன். குறுகிய காலத்திற்குள் பாடல்களை இசையமைத்து, தயார் செய்த என்னுடைய இசைக்குழுவுக்கு நன்றி என உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஸ்ருதி ஹாசன் தவிர, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோர் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா மேடையில் நடனமாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X